எலான் மஸ்க்கின் 13வது குழந்தையை பெற்றெடுத்த பிரபல எழுத்தாளர்.. தாய் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 5 மாதங்களுக்கு முன் தனக்கு பிறந்த குழந்தைகளுக்கு பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் தான் தந்தை என்று பெண் எழுத்தாளர் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்க்-க்கு ஏற்கனவே 11 குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது பெண் எழுத்தாளர் இப்படியொரு குற்றச்சாட்டை வைத்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் முக்கிய பணக்காரர்களில் ஒருவர் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். இவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகத்தில், DOGE எனப்படும் அரசு செயல்திறன் துறைக்கு தலைமை வகித்து வருகிறார். இதன் மூலமாக தொழில்நுட்பம், மென்பொருளை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Elon Musk Donald Trump USA

இதனால் எலான் மஸ்க் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் சர்வதேச அளவில் எலான் மஸ்க் செயல்பாடுகள் மீது அதிக கவனமும் குவிந்துள்ளது. இந்த நிலையில் பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர், தனக்கு 5 மாதங்களுக்கு முன் பிறந்த குழந்தையின் தந்தை எலான் மஸ்க் தான் என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் தொழிலதிபரான எலான் மஸ்க்-க்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்துள்ளது. 2000ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்ட எலான் மஸ்க், 2002ஆம் ஆண்டு முதல் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது.

இதன்பின் ஜஸ்டின் வில்சனுடன் இணைந்து 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய எலான் மஸ்க், 5 குழந்தைகளை பெற்றெடுத்தார். தொடர்ந்து பிரபல நடிகையான ரிலேவை 2 முறை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் எந்த குழந்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. இதன்பின் பாடகியான க்ரீம்ஸை திருமணம் செய்து கொண்ட எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

இவரையும் விட்டு பிரிந்த மஸ்க், தற்போது ஷிவோன் ஷில்லீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதனால் எலான் மஸ்க்-க்கு மொத்தமாக 12 குழந்தைகள் பிறந்த நிலையில் 11 குழந்தைகள் அவருடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர், தனக்கு பிறந்த குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று பதிவிட்டுள்ளார்.

Elon Musk Donald Trump USA

அந்த பதிவில், 5 மாதங்களுக்கு முன்பாக என் குழந்தையை உலகிற்கு வரவேற்றேன். குழந்தையின் தந்தை எலான் மஸ்க் தான். குழந்தையின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்காக இந்த விஷயத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியதால், இங்கு பதிவிட்டுள்ளேன்.

என் குழந்தையை சாதாரண மற்றும் பாதுகாப்பான சூழலில் வளர்க்க விரும்புகிறேன். அதன் காரணமாக ஊடகங்கள் என் குழந்தையின் தனியுரிமையை மதிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். ஆஷ்லே கிளேரின் பதிவைத் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக எலான் மஸ்க் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+