வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முழுக்க முட்டாள்தனம்!" ட்விட்டரில் டிரம்பிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறேன்! எலான் மஸ்க் தடாலடி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் தளத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டர் புதிய ஓனர் எலான் மஸ்க் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் தளத்தைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். பின்னர், திடீரென தன்வசம் இருந்த ட்விட்டர் பங்குகளை அவர் உயர்த்தினார்.

அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.! அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

இதையடுத்து ட்விட்டர் போர்டில் அவர் உறுப்பினர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இதை ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த டீலை தடுக்கும் முயற்சியில் ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் சிலர் இறங்கினர். இருப்பினும், பெரும்பாலான ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் எலான் மஸ்க் டீலுக்கு ஒப்புக் கொண்டனர். ஒரு பங்கு 54 டாலர் என்ற வீதத்தில் ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். இதன் மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்த ட்விட்டர் தனிநபர் நிறுவனமாக மாறுகிறது.

ட்விட்டர்

ட்விட்டர்

இன்னும் சில நாட்களில் இந்த டீல் முழுமையாக முடிந்து, எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் ட்விட்டர் நிறுவனம் முழுமையாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் கைகளில் ட்விட்டர் நிறுவனம் வந்த பிறகு, அதில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.. ஏற்கனவே, எடிட் வசதி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனி நபர் தவிர நிறுவனங்களை ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

 தடையை நீக்குவேன்

தடையை நீக்குவேன்

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் தளத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாகவும் இப்போது எலான் மஸ்க் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஃபைனான்சியல் டைம்ஸ் ஃபியூச்சர் ஆஃப் தி கார் மாநாட்டில் பேசிய எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டரின் தடையைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார்.

முட்டாள்தனம்

முட்டாள்தனம்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ட்விட்டரில் இருந்து ட்ரம்ப் தடை செய்யப்பட்டது, அவரது குரலை மௌனமாக்கவில்லை, மாறாக வலதுசாரிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அவரது கருத்து செல்லும் வேகத்தை அதிகப்படுத்தவே செய்துள்ளது. இந்தத் தார்மீக ரீதியாகத் தவறானது மற்றும் முழுக்க முழுக்க முட்டாள்தனமான முடிவ" என்றார். தன்னை பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவாளராக எலான் மஸ்க் காட்டிக் கொள்ளும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Recommended Video

    Ambaniயின் Italy Brand! Japanக்கு Elon Musk எச்சரிக்கை | Aanees Bits and Bytes | OneIndia Tamil
    ட்ரம்ப்

    ட்ரம்ப்

    கடந்த 2020 அதிபர் தேர்தலில் சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதாகவும் வாக்குப்பதிவில் மாபெரும் மோசடி நடந்துள்ளதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. அமெரிக்க அதிபராக ஜோ பைடனை தேர்ந்தெடுக்கும் நிகழ்வின் போது, டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டனர். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களும் டிரம்பிற்கு நிரந்தர தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tesla Chief Executive Elon Musk said he would reverse Twitter's ban on former U.S. President Donald Trump: Elon Musk about free speech in twitter and Trump twitter ban.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X