Tech உலகை ஆளும் இந்தியர்கள்.. எலான் மஸ்க் போட்ட சூப்பர் ட்வீட்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டதை அடுத்து இந்தியர்களின் திறமைகளை அமெரிக்கா பெரிதும் பயன்படுத்தி பலனடைகிறது என டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பிரபல சமூகவலைதள நிறுவனமான ட்விட்டரின் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த ஜாக் டோர்சி அப்பதவியிலிருந்து விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு பதிலாக ட்விட்டரின் புதிய சிஇஓவாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில் பிறந்தவர், மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பயின்றவர்.

அமெரிக்கா பல்கலைக்கழகம்
இதையடுத்து அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் அங்கேயே குடியுரிமை பெற்றார். இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம், யாஹு எனும் தேடு பொறி நிறுவனத்திலும் பணியாற்றினார். இங்கெல்லாம் தொடங்கிய இவரது பயணம் 2011 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிக்கு சேர்ந்தார்.

டிவிட்டர்
படிப்படியாக முன்னேறி தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்ற இவர் டிவிட்டரின் சிஇஓவாக தற்போது பதவி ஏற்றுள்ளார். இதனால் இந்தியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். பராக் அகர்வால் நியமனத்தில் இன்னொரு சிறப்பாக உலகின் தலைசிறந்த நுட்பியல் நிறுவனங்களின் CEO பதவியில் இருக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

மைக்ரோசாப்ட்
ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா, அடோப் நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு நாரயேன், விஎம்வேரின் சிஇஓ ரகு ரகுராம் ஆகியோர் இந்தியர்களாவர். இதுகுறித்து அயர்லாந்து கோடீஸ்வரரான ஸ்டிரைப் நிறுவனத்தின் பேட்ரிக் கொலிஷன் இந்திய சிஇஓக்கள் நியமனம் குறித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார்.

மைக்ரோசாப்ட்
அந்த பதிவில் கூகுள், மைக்ரோசாப்ட், அடோப், ஐபிஎம், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்தியாவில் படித்து வளர்ந்தவர்கள். தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களின் அபரிமிதமான வெற்றியை பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்கா வழங்கும் நல்வாய்ப்பாகவே இது தெரிகிறது என்றார்.
Recommended Video

பாராட்டிய மஸ்க்
இதற்கு டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் இந்தியர்களின் திறமைகளை அமெரிக்கா பெரிதும் பயன்படுத்தி பலனடைகிறது என தெரிவித்துள்ளார். இந்தியாவையும் இந்தியர்களையும் பாராட்டி இவர் போட்ட இந்த ட்வீட்டால் மற்ற நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications