ஏஐ தொழில்நுட்பத்தால் இப்படியும் செய்ய முடியுமா? ஷாக் கொடுக்கும் வீடியோ..ஆனந்த் மகிந்திரா அலார்ட்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அசல் எது போலி எது என வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போலியான வீடியோக்களை தயாரிக்க முடியும் என்பதை இணையத்தில் யூசர் ஒருவர் வெளியிட்டு இருந்த வீடியோவை ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

தனக்கு கிடைக்கும் சுவாரசிய தகவல்கள் மற்றும் அசாத்திய வேலைப்படுகளுடன் செய்யப்பட்ட படைப்புகள் என தான் கண்டு வியக்கும் பல தகவல்கள தனது ட்விட்டர் பகிர்ந்து வருகிறார்.

 ஆனந்த் மகிந்திரா

ஆனந்த் மகிந்திரா

அதேபோல், விழிப்புணர்வு ஊட்டும் வகையிலான பதிவுகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வரும் ஆனந்த் மகிந்திராவை ட்விட்டரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். பிசினஸ் ஐடியாக்கள் மற்றும் தொழில் நுட்பம் குறித்த தகவல்களையும் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீப காலமாக இணைய உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி வேலைகளும் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி இணையத்தில் ஒருவர் செயல்முறை விளக்கத்துடன் வெளியிட்டு இருந்த வீடியோவை ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 இருவேறு வீடியோக்கள்

இருவேறு வீடியோக்கள்

56 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், ''செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவர் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் இரு பாகங்களாக பிரிக்கப்பட்ட இருவேறு வீடியோக்கள் ஓடுகின்றன. இரண்டிலுமே ஒரே நபர்தான் இருக்கிறார். வீடியோ ஓடத்தொடங்கியதும் வீடியோவில் பேசும் நபர் செய்யும் செய்கைகள் மற்றும் முக பாவனைகள் அனைத்தும் மற்றொரு பகுதியில் இருக்கும் வீடியோவிலும் தெரிகிறது.

முக அமைப்புகளை மார்பிங் செய்து

முக அமைப்புகளை மார்பிங் செய்து

மேல் பகுதியில் இருக்கும் நபரின் முகம் திடீரென கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், ஷாருக் கான் ஆகியோரை போன்ற முக அமைப்புகளை கொண்டு, அடுத்தடுத்து மாறி கொண்டிருக்கிறது. பல்வேறு நபர்களின் முக அமைப்புகளை மார்பிங் செய்து, போலி வீடியோவை தயாரித்து எளிதாக பரவ விட முடியும் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்து உள்ளது.

எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில்

எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில்

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:- இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ சரியான ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒருபுறம் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ இருந்தாலும் ஏமாற்றப்பட கூடிய விஷயங்களை கொண்டுள்ள இத்தகைய கண்டெண்ட்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இந்த சமூகத்தில் எப்படி தயாராக இருக்கிறோம்? என்பதும் கவனத்தில் கொள்வதற்குரிய விஷயமாக உள்ளது.

பாதுகாப்பு விசயங்கள் உள்ளதா?

பாதுகாப்பு விசயங்கள் உள்ளதா?

இதுபோன்ற விவகாரங்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ளும் வகையில், பாதுகாப்பு விசயங்கள் எதுவும் உள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் பல துறை பிரபலங்களின் முக அமைப்புகளை அப்படியே பிரதிபலித்து உண்மை எது போலி எது என வித்தியாசப்படுத்தி மோசடி செயல்கள் நடக்கலாம் என்ற ஆபத்து சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+