மில்டன் புயலால் மிரளும் அமெரிக்கா.. 55 லட்சம் பேர் வெளியேற்றம்.. மோசமான நிலைமை.. அடகடவுளே
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மேற்கு கடற்கரை நகரில் இன்று மில்டன் புயல் தாக்க உள்ளது. இந்த புயல் அமெரிக்க வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் 55 லட்சம் மக்களை உடனடியாக வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் புயல்களின் தாக்கம் இருந்து வருகிறது. இதில் அதிகமான சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக கடற்கரையை நோக்கி நகரங்கள் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று அமெரிக்காவுக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்ஸிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டி நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
தற்போது இது புயலாக உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‛மில்டன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தான் அதி தீவிர சக்தி வாய்ந்த புயலாக மாறி உள்ளது. இந்த புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்க உள்ளது. புளோரிடா மாகாணத்தில் தாம்பா விரிகுடாவில் கரையை கடக்கிறது.
புயல் காரணமாக பயங்கரமான சூறாவளி காற்றும், கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி புளோரிடா மாகாணத்தின் மேற்கு கடற்கரையை சுற்றிய இடங்களில் வசிக்கும் 55 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புயல் என்பது கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்கா கண்டிராத பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கூறியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேறி வருகின்றனர். மேலும் அரசு சார்பில் பொதுமக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதவிர புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மில்டன் புயல் காரணமாக புளோரிடா தேசிய பாதுகாப்பு குழு 5 ஆயிரம் சர்வீஸ் எண்களை வழங்கி உள்ளது. அதோடு சுகாதாரத்துறை சார்பில் 600 அவசர உதவிக்கான வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி புளோரிடா சுகாதாரத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் காரணமாக சுகாதார அவசர நிலை வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார். இப்படி மிரட்டும் மில்டன் புயலால் அமெரிக்கா மக்கள் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications