உலகமே அழியபோகுது என சொல்லிக்கொண்டு.. ஸ்நாக்ஸை பையில் நிரப்பி எடுத்து வந்த Meta ஊழியர்கள்!
வாஷிங்டன்: மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களை வேலை விட்டு நீக்குவதற்கு முன்னர், ஊழியர்கள் செய்த செயல் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. என்ன நடந்தது? விரிவாக பார்ப்போம்.
உடம்பில் தெம்பு இருக்கும் வரை கசக்கி பிழிந்து வேலை வாங்குவதும், தேவையில்லை எனில் தூக்கி எறிவதும்தான் கார்ப்பரேட் கலாச்சாரம். மெட்டா நிறுவனமும் இதற்கு விதி விலக்கல்ல. இந்நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியது. அந்த கடைசி நாள், ஊழியர்கள் மிகப்பெரிய உளவியல் சிக்கலை எதிர்கொண்டனர்.

விடிந்தால் லே ஆஃப். யாருக்கு வேலை இருக்கும், யாருக்கு இருக்காது என்பது தெரியாது. விஷயம் வெளியில் லீக் ஆகிவிட்டது. பலரும் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த பதற்றம், நாளை உலகம் அழிந்துவிடும் என்கிற எண்ணத்தை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. அன்றைய தினம் சோஷியல் மீடியா முழுவதும் உலகம் அழிந்துவிடும் என்பதை பற்றிதான் ஊழியர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பதற்றமும், பயமும் அவர்களை ஆக்கிரமித்திருக்கிறது.
வேலையை நம்பி வாங்கிய கடனை கட்ட என்ன செய்வது? லோனுக்கு EMI என்ன செய்வது? குழந்தைகளின் படிப்பு செலவு, பெற்றோரின் மருத்துவ செலவு இவற்றுக்கு என்ன செய்வது? என பல்வேறு கேள்விகள் கண் முன்னே வந்து நிற்கின்றன.
மறுபுறம், சிலர் அவசர அவசரமாக தங்கள் பைகளில் இலவசமாக வழங்கப்படும் ஸ்நாக்ஸை அள்ளி நிரப்பியுள்ளனர். மெட்டா நிறுவனம் அலுவலகத்தில் தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாக ஸ்நாக்ஸை விநியோகிக்கும். அதைதான் அள்ளி பையில் திணித்திருக்கிறார்கள். நாளை இந்த அலுவலகத்திற்கு வருவோமா? வர மாட்டோமா என்பது தெரியாது. எனவே கடைசியாக நமக்கான பலன்களை எடுத்துக்கொள்வோம் என்று இப்படி செய்திருக்கிறார்கள். இந்த தகவல்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் லீக் ஆகியிருக்கிறது.
இது பரவலாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டாலும், கடைசி நிமிடம் எவ்வளவு அச்சமானதாக இருந்திருக்கிறது என்பதையே தெளிவுப்படுத்துகிறது. அந்த நிறுவனத்திலிருந்த வெளியேற்றப்பட்டால், வெளியில் காசு கொடுத்து ஸ்நாக்ஸ் கூட வாங்க முடியாத அளவில்தான் அந்த ஊழியர்களின் நிலை இருந்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துவதாக பலரும் கூறுகின்றனர்.
ஒருவேளை நீங்கள் இப்படியான சூழலை எதிர்கொண்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் மனம் முதலில் எதை யோசிக்கும்? கமெண்ட்டில் சொல்லுங்க.
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications