வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உருகும் வார்த்தை.. ரஷ்யாவின் போரால் ஒருவார்த்தை டுவிட்டில் இணைந்த உக்ரைன்.. வருந்தும் ஜெலன்ஸ்கி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் கடந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது டுவிட்டரில் ஒற்றை வார்த்தை டுவிட் டிரெண்ட் ஆகும் நிலையில் அதில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்பட அந்நாட்டு மக்கள் இணைந்து முக்கிய வார்த்தையை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

உக்ரைன்-ரஷ்யா ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. ஒரு காலத்தில் உக்ரைன் என்பது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனாக இருந்தது. இந்நிலையில் தான் தற்போது தனித்தனி நாடுகளாக ரஷ்யா, உக்ரைன் உள்ளன.

இந்நிலையில் தான் உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நாட்டோ கூட்டமைப்பில் இணைய முடிவு செய்து அதற்கான பணியை செய்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் உக்ரைன் பின்வாங்கவில்லை.

மாறி மாறி அட்டாக்.. போரில் சண்டையிட்டுக்கொள்ளும் ரஷ்ய - உக்ரைன் வீரர்கள்.. விடாத மோதல்! மாறி மாறி அட்டாக்.. போரில் சண்டையிட்டுக்கொள்ளும் ரஷ்ய - உக்ரைன் வீரர்கள்.. விடாத மோதல்!

போர் துவங்கிய ரஷ்யா

போர் துவங்கிய ரஷ்யா

இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை துவங்கியது. ரஷ்யாவின் முப்படைகளும் உக்ரைன் மீது தாக்குதலை தொடர்ந்தன. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. போர் நடவடிக்கையை கைவிடும்படி அந்நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதனை கேட்கவில்லை. இதையடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

 6 மாதமாக நீடிக்கும் போர்

6 மாதமாக நீடிக்கும் போர்

ரஷ்யாவின் போர் நடவடிக்கை துவங்கி 6 மாதங்கள் கடந்தாலும் கூட இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யா படை வீரர்கள் உக்ரைனை கைப்பற்றுவதில் முனைப்பு காட்டி உக்ரைனில் முன்னேறி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தாய்நாட்டை பாதுகாக்கும் வகையிலும் உக்ரைன் நாட்டு மக்கள் படை வீரர்கள் இணைந்து ரஷ்யா படைகளை தாக்கியும் தடுத்தும் வருகின்றனர். இந்த போரால் ஏராளமான உக்ரைன் மக்கள் இறந்துள்ளனர். மேலும் ரஷ்யாவின் படை வீரர்களும் பலியாகி உள்ளனர். அதோடு பல மக்கள் காயங்கள் அடைந்துள்ளனர்.

ஒற்றை வார்த்தை டுவிட்

ஒற்றை வார்த்தை டுவிட்

இந்நிலையில் தான் ரஷ்யா போரை கைவிட வேண்டும் என தொடர்ந்து உக்ரைன் மக்களும், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ரஷ்யாவின் நட்பு நாடுகள் வழியாகவும் ரஷ்யாவுக்கு தூது அனுப்பி வருகிறார். ஆனாலும் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் கேட்டு கொள்ளாமல் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது டுவிட்டரில் ஒற்றை வார்த்தை டுவிட் டிரெண்ட் ஆகி வருகிறது.

சுதந்திரம் என டுவிட்டர்

சுதந்திரம் என டுவிட்டர்

இதில் டிரெண்டிங்கில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அந்நாட்டு அமைச்சர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்துள்ளார். அவர்கள் அனைவரும் ‛Freedom' (சுதந்திரம்) என பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து அவர்கள் இத்தகயை டுவி்டடர் பதிவை செய்து வருகின்றனர்.

English summary
It has been 6 months since Russia launched a war on Ukraine. In this case, currently a single word tweet is trending on Twitter, in which the people of Ukraine, including the President of Ukraine, Volodymyr Zelensky, post the key word and make it trend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X