நெருங்கிய கூட்டாளிகளாக இருந்த இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா.. பகையாளியானது ஏன்? எங்கிருந்து மோதல் ஆரம்பித்தது
வாஷிங்டன்: இப்போது எதிரும் புதிருமாக உள்ள ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு காலத்தில் ஒன்றாக நட்பு நாடுகளாகவே விளங்கின. பின்னர் ஏன் இந்த நாடுகளுக்குள் சண்டை ஏற்பட்டது.. எப்போது இருந்து இந்த மோதல் வெடித்தது என்பதற்கான பின்னணி விவரங்களை இங்கே பார்க்கலாம்.
உக்ரைன் - ரஷ்யா போர் ஒருபக்கம் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக்கொண்டு இருக்க மற்றொரு பக்கம் இஸ்ரேல் - ஹமாஸ் மோதி வருகிறது. சர்வதேச அளவில் போர் பதற்றம் கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வரக்கூடிய சூழலில் இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த வாரம் நடைபெற்ற மோதல் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியது.

நட்பு நாடுகளாக இருந்து பிரிந்தது எப்படி?
இதற்கு மத்தியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் கோதாவில் இறங்க மூன்றாம் உலகப்போருக்கான முதல் அடியோ என கவலை கொள்ளும் அளவுக்கு சர்வதேச அளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஒருவாரமாக நீடித்த இந்த பதற்றம் தற்போது சற்று தணிந்துள்ளது. இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.
இப்போது எதிரும் புதிருமாக உள்ள ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு காலத்தில் ஒன்றாக நட்பு நாடுகளாகவே விளங்கின. பின்னர் ஏன் இந்த நாடுகளுக்குள் சண்டை ஏற்பட்டது.. எப்போது இருந்து இந்த மோதல் வெடித்தது என்பதற்கான பின்னணி விவரங்களை இங்கே பார்க்கலாம்.
யூதர்களின் இரண்டாம் வீடாக பெர்சியா
தற்போதைய ஈரான், முன்பு பெர்சியா என்று அழைக்கப்பட்டது. உலகின் பழமையான நாகரிகத்தை பெர்சியா கொண்டிருந்தது. கிமு 539-ல் பாபிலோனியர்கள், யூதர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தினார்கள். இதனை அறிந்து வெகுண்டெழுந்த பெர்சியா மன்னர் சைரஸ், பாபிலோனியர்கள் மீது படையெடுத்தார். அவர்களை வீழ்த்தியதோடு யூதர்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தார்.
எனவே, யூதர்கள் தங்களின் இரண்டாம் வீடு என்று பெர்சியாவை கூறினர். அதோடு யூதர்கள், சைரஸ் மன்னனை 'மீட்பர்' என்றும் வழிபட்டதாக சொல்லப்படுகிறது. கால ஓட்டத்தில் ஒரு கட்டத்தில் பெர்சியாவில் இஸ்லாமிய மதம் பரவி, அந்த நாடே ஈரான் என பெயர் மாற்றப்பட்டது. அப்போது கூட யூதர்களும், ஈரானியர்களும் ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். இன்றைக்கும் ஈரானில் அதிகளவு யூதர்கள் வசிக்கின்றனர்.
இங்கிருந்துதான் பிரச்சினை வெடித்தது
இது ஈரானின் வரலாறு என்றால் மற்றொரு பக்கம், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் இருந்து பிரிந்து 1948-ம் ஆண்டு ஒரு தனி நாடாக உருவானது. அப்போது இஸ்ரேலுக்கு ஈரான் ஆதரவு அளித்து வந்தது. சொல்லப்போனால், இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்த முஸ்லிம் நாடுகளில் முதலாவது நாடு ஈரான் தான். அதாவது மதத்தை தாண்டி இருநாடுகளுக்கும் ஒரு நல்ல நட்புறவு நீடித்தது. ஆனால், 1978 க்கு பிறகு நிலைமை தலைகீழ் ஆனது.
ஈரானில் முஸ்லிம் புரட்சி ஏற்பட்டு ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, இஸ்ரேலை ஈரான் எதிர்க்க ஆரம்பித்தது. இஸ்ரேலை கடுமையாக எதிர்த்த காசாவில் செயல்படும் ஹமாஸ் லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதி ஆகிய குழுக்களுக்கு ஈரான் உதவி செய்தது. இதனால் ஈரான் மீது இஸ்ரேல் கோபம் அடைந்தது. இங்கிருந்துதான் பிரச்சினை வெடிக்க தொடங்கியது எனலாம்.
தாக்குதலுக்கு காரணம் என்ன
ஈரானுடன் ஒப்பிடும் போது இஸ்ரேல் அளவிலும் மக்கள் தொகையிலும் சிறியது. இதனால் ஈரான் மீதான போரை தன்னிச்சையாக நடத்த முடியாது என்று இஸ்ரேல் நினைத்தது. இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டன் ஆகியவை ஆதரவு அளித்தன. அமெரிக்காவும் முழு சப்போர்ட்டாக இருந்தது. ஈரான் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது.












Click it and Unblock the Notifications