வானத்திலிருந்து விழுந்த பச்சை கல்! அடேங்கப்பா இவ்வளவு பிரகாசமா இருக்கே.. நீங்க பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் நேற்றிரவு வானத்தில் பச்சை நிறத்தில் பிரகாசமான ஒளிக்கீற்று தோன்றி மறைந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
நேற்றிரவு ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், ஓக்லஹோமா, டென்னசி மற்றும் மிசோரி ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் இந்த பச்சை நிற ஒளிக்கீற்று தென்பட்டிருக்கிறது. இதை கண்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். விண்கற்கள் வானத்திலிருந்து விழும்போது இதுபோன்று ஒளிக்கீற்று தெரிவது வழக்கமானதுதான். ஆனால் அவை எல்லாம் வெள்ளை நிறத்தில் இருக்கும். நேற்று தெரிந்த ஒளிக்கீற்று பச்சை நிறத்தில் இருந்திருக்கிறது.

சோஷியல் மீடியாவில் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த ஒருவர், "ஒரு பெரிய பச்சை நிற விண்கல் வானத்தில் பல சிறிய துண்டுகளாக உடைந்து, ஒரு பெரிய துண்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சென்றதைக் கண்டேன். என் மனைவியும் அதைப் பார்த்தாள். மிகவும் ஆச்சரியமாக இருந்தது" என்று கூறியிருக்கிறார். மற்றொருவர் கூறுகையில், "நான் வெளியே இருந்தேன், அப்போது இதற்கு முன்னர் கண்டிராத அளவுக்கு நீண்ட தூரம் ஒரு விண்கல் விழுவதைக் கண்டேன். பின்னர் அது இரண்டாக உடைந்தது! இதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை! ஆச்சரியமாக இருந்தது" என்று கூறியிருந்தார்.
இது குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்திருக்கின்றனர். சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. குறிப்பாக வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி போகும் போது சிறிய துகள்களை வழியில் விட்டு செல்லும். அந்த இடத்தின் வழியாக பூமி நகரும்போது, பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக சிறிய துகள்கள் பூமி நோக்கி விழும். பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் இருப்பதால் கல் விழும் வேகத்தில் வளிமண்டலத்தில் உரசி எரிந்துவிடும்.
Check out this green flash meteor from Perseid belt 2 days ago under 4k views pic.twitter.com/5iMZR6fGLg
— Bluntly Put Philosopher (@SocraticScribe) August 15, 2025
கல் எப்படிங்க எரியும்? என கேள்வி எழலாம். மணிக்கு 40,000 முதல் 2,50,000 கி.மீ வேகத்தில் கல் பூமியை நோக்கி வரும்போது கல் நிச்சயம் எரிந்து சாம்பலாகிவிடும். ஏனெனில் இவ்வளவு வேகத்தில் காற்றை ஒரு பொருள் உரசும்போது அதன் வெப்பநிலை ஆயிரம் டிகிரி செல்சியஸுக்கு மேல் போகும். எனவேதான் கற்கள் எரிகின்றன. இந்த சம்பவத்தின்போது வானத்தில் தெரியும் எரி பிழமைப்பைதான் நாம் வெள்ளை கோடுகளாக, ஒளிக்கீற்றுகளாக பார்க்கிறோம். இவை அனைத்தும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிடும்.
சரி ஏன் பச்சை நிறத்தில் ஒளிக்கீற்று தெரிகிறது என்று கேள்வி எழலாம். இதற்கு காரணம் விண்கல்லில் உள்ள ரசாயன கலவைதான். மக்னீசியம் மற்றும் நிக்கல் தனிமங்கள் அதிகம் இருக்கும் விண்கற்கள் எரியும்போது பச்சை நிறத்தில் தெரியும். பச்சை மட்டுமல்ல மஞ்சள்/ஆரஞ்சு, ஊதா, நீலம்/பச்சை, சிவப்பு நிறங்களிலும் ஒளிக்கீற்று தெரியும்.
மஞ்சள்/ஆரஞ்சு: சோடியம் அல்லது இரும்பு
ஊதா: கால்சியம்
நீலம்/பச்சை: மக்னீசியம் அல்லது தாமிரம்
இதுதான் விண்கற்கள் பல நிறங்களில் எரிய காரணமாகும். சிவப்பு நிறத்தில் எரிய காரணம் விண்கல் விழும் பகுதியில் நைட்ரஜன் அல்லது ஆக்சிஜன் இருப்பதால்தான்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications