H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு.. டிரம்ப் நிர்வாகத்தால் புதிய பிரச்சனை! இந்தியர்களே உஷார்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள், தங்கள் விசா புதுப்பிப்புக்ககாக இந்தியா வந்திருந்த நிலையில், மீண்டும் அமெரிக்காவுக்கு செல்வதற்கான நேர்காணலில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
டிரமப் நிர்வாகம் இந்த நேர்காணலில் சில மாற்றங்களை செய்திருப்பதே, தாமதத்திற்கு காரணமாகியிருக்கிறது. ஜனவரியில் நடைபெற இருந்த இந்த நேர்காணல்கள் தற்போது மார்ச், ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

என்ன பிரச்சனை?
விசா என்பது, அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் வழங்கும் அனுமதி போன்றது. ஆனால், விசா மட்டும் கிடைத்துவிட்டுவிட்டால் அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட முடியாது. அதற்கு விசா முத்திரை அவசியம். விசா கிடைத்தவர்கள், அமெரிக்க தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இதில் வெற்றி பெற்றால் பாஸ்போர்ட்டில் விசா முத்திரை ஸ்டிக்கர் ஒட்டப்படும். இது இருந்தால் மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய முடியும்.
விசாவும் விசா முத்திரையும்
ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே அமெரிக்காவில் வேலை செய்து விசா காலாவதியாகிவிட்டது எனில், விசா முத்திரையும் காலாவதியாகிவிடும். ஆனால், அமெரிக்காவில் தங்கியிருக்க குறிப்பிட்ட காலம் வரை அனுமதி இருக்கிறது. அதை I-797 மற்றும் I-94 என்று சொல்வார்கள். இந்த தேதி காலாவதியாகாவிட்டால் அமெரிக்காவில் தங்கியிருப்பது பிரச்சனையல்ல.
நேர்காணல் தேதி ஒத்திவைப்பு
ஆனால், தேதி முடிவடைகிறது எனில், விசா முத்திரையை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதற்காக பலரும் இந்தியாவுக்கு வந்து செல்வார்கள். இப்படி இந்தியா வந்தவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும் முடியாததை போல டிரம்ப் நிர்வாகம் செக் வைத்திருக்கிறது. அதாவது மீண்டும் விசா முத்திரைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தீவிர சமூக வலைதள ஆய்வு மேற்கொள்ள டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் பங்கேற்பதற்கான தேதிகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் வரி
இதனால் H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்கள் கடுமையான பிரச்சனையை எதிர்க்கொண்டிருக்கின்றனர். நீண்ட காலம் இந்தியாவில் தங்குவது வரிவிதிப்பில் சிக்கலை உருவாக்குகிறது. இந்தியாவில் அதிக நாட்கள் தங்குவது வரி அபாயத்தை உருவாக்கும். ஒரு நிதியாண்டில் 182 நாட்களுக்கு மேல் செலவழித்தால், வெளிநாட்டில் சம்பாதித்தாலும் இந்தியா வரி கட்ட வேண்டும். இது H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு சிக்கல்.
பணி நீக்கம்
இரண்டாவது பிரச்சனை, நேர்காணல் காரணமாக தாமதமாவதால் சில அமெரிக்க நிறுவனங்கள், ஊழியர்களை இந்தியக் கிளைகளுக்கு தற்காலிகமாக மாற்றியுள்ளன. வெளிநாட்டு முதலாளிக்கு வரிப் பொறுப்பு உருவாகுமா என ஆராய்ந்து வருகின்றன. ஊதியத்துடன் கூடிய விடுமுறை முடிந்ததும் திரும்பாவிட்டால் பணிநீக்கம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளன.
அதேபோல முக்கிய வருவாய் ஈட்டுபவர் இந்தியாவில் சிக்கித் தவிக்க, மனைவி அல்லது குழந்தைகள் அமெரிக்காவில் பிரிந்து வாழ நேரிடுகிறது. அமெரிக்க வாடகை, செலவுகளைத் தொடர்ந்து செலுத்துகின்றனர். அதே வேளையில் இந்தியாவில் சம்பளமின்றி அல்லது குறைந்த சம்பளத்துடன் வாழும் கடினமான சூழ்நிலை நிலவுகிறது.
சட்ட உள்கட்டமைப்பு இல்லாத சிறிய அமெரிக்க நிறுவனங்கள், இந்தச் சிக்கலைக் கையாள முடியாமல் ஊழியர்களைப் பணி விலகுமாறோ அல்லது ஊதியமில்லாத விடுப்பில் செல்லுமாறோ கட்டாயப்படுத்துகின்றன.
-
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன?












Click it and Unblock the Notifications