அடப்பாவமே! ஓவர் நைட்டில் 1.28 லட்சம் கோடி காலி.. பட்டென சரிந்த இளைஞரின் சொத்து மதிப்பு! நடந்தது என்ன
வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர்களில் ஒருவராக இருந்த சாம் பேங்க்மேன்-ஃப்ரைடின் சொத்து மதிப்பு மடமடவென சரிந்து பூஜ்ஜியத்தை எட்டியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த சென்டிரல் வங்கிகளும் மக்களின் துன்பத்தைப் போக்கப் பணத்தை அச்சடித்துத் தள்ளியது. இதனால் பணப் புழக்கம் அதிகமாக இருந்தது.
வட்டியும் மிகக் குறைவாக இருந்ததால் மக்கள் பலரும் பல்வேறு விஷயங்களில் முதலீடு செய்தனர். இதனால் பலரும் கூட குறுகிய காலத்திலேயே நல்ல லாபம் பார்த்தார்கள்.

அமெரிக்கா
இப்போது கொரோனா முடிந்துவிட்ட நிலையில், பணப் புழக்கம் அதிகமாக உள்ளதால் விலைவாசியும் ஏற தொடங்கி உள்ளது. இதனால் அனைத்து நாட்டு மத்திய வங்கிகளும் வரியை அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. இதனால் பல நிறுவனங்களும் முதலீடு கிடைக்காமல் தடுமாறத் தொடங்கி உள்ளன. உலகெங்கும் நடக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளே இதற்குச் சாட்சி. இதனால் கிரிப்டோ கரன்சி சந்தையும் கூட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

கிரிப்டோ கரன்சிகள்
கொரோனா காலத்தில் கிரிப்டோ கரன்சிகள் கோடிகளில் புரண்டது அனைவருக்கும் தெரியும். அப்படித்தான் எஃப்டிஎக்ஸ் (FTX) கிரிப்டோ சந்தை கோடிகளில் புரண்டது. அந்த நிறுவனத்தின் சாம் பேங்க்மேன்-ஃப்ரைடின் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம் வந்தார். ஆனால், இப்போது வெறும் சில நாட்களில் அவர் தனது $16 பில்லியன் சொத்தை (இந்திய மதிப்பில் 1.28 லட்சம் கோடி) இழந்துள்ளார்.

சொத்து மதிப்பு
உலகில் இவ்வளவு குறுகிய காலத்தில் யாரும் இந்தளவுக்குச் சொத்துகளை இழந்தது இல்லை. அதிகபட்சமாக 30 வயதான சாமின் சொத்து மதிப்பு $20 பில்லியனாக (இந்திய மதிப்பில் 1.28 லட்சம் கோடி) இருந்தது. அது அப்படியே மெல்லச் சரிந்தாலும் கூட இந்த வாரத் தொடக்கத்தில் அது 16 பில்லியன் டாலராகவே இருந்தது. ஆனால், அதன் பின்னர் பெரும் வீழ்ச்சியடைந்த இவரது கிரிப்டோ சந்தை பூஜ்ஜியத்தை அடைந்துள்ளது.

என்ன காரணம்
பிரபல ப்ளூம்பெர்க் நிறுவனம் சாமின் FTX கிரிப்டோ சந்தையை ஒரு டாலராகவே மதிப்பிடுகிறது. இதில் மட்டும் சாமுக்கு 70% பங்குகளை உள்ளது. கிரிப்டோ சந்தையில் ஏற்பட்ட திடீர் சரிவால் வர்த்தகம் முடக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும். சாமிற்கு பங்குச் சந்தை வர்த்தகம் செய்யும் ராபின்ஹூட் தளத்திலும் குறிப்பிட தகுந்த அளவு சொத்துகள் இருந்தது. ஆனால், அதை நேரடியாக அவர் பெயரில் வைத்திருக்காமல் FTX கிரிப்டோ சந்தை பெயரில் வைத்து இருந்தார். இதனால் அந்த முதலீடும் போய்விட்டது.

வெறும் சில நாட்கள்
கிரிப்டோ சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வீழ்ச்சியால் அவர் வெறும் சில நாட்களில் 1.28 லட்சம் கோடியை இழந்துள்ளார். மேலும், FTX கிரிப்டோ சந்தை திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் நிலையில், அங்கு பணப்புழக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவே FTX கிரிப்டோ சந்தைக்கு முக்கிய பிரச்சினையாக மாறியது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்த்தகத்தை முடக்கியது.

பெரிய அடி
கடந்த ஆண்டு மட்டும் இவரது கிரிப்டோ வர்த்தக நிறுவனங்கள் பல மில்லியன் டாலர்களை லாபமாக ஈட்டின. ஆனால், இந்தாண்டு வரி உயர்வால் பணப்புழக்கம் குறைந்த நிலையில், அது சாமுக்கு பெரிய அடியாக அமைந்தது. வெறும் சில நாட்களில் அவரது கிரிப்டோ சாம்ராஜ்யம் லட்சம் கோடிகளில் இருந்து பூஜ்ஜியமாகச் சரிந்துவிட்டது.

அவ்வளவுதான்
அதேநேரம் சாம் பேங்க்மேன்-ஃப்ரைடின் வேறு சில நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனங்கள் நல்ல நிலையில் உள்ளதால், இவருக்குப் பிரச்சனை இல்லை. இருப்பினும், அந்த முதலீட்டையும் கூட சாம் பேங்க்மேன்-ஃப்ரைடின் அவரது பெயரில் செய்யாமல் இப்போது திவாலான அவரது நிறுவனத்தின் பெயரில் செய்திருந்தால், அந்த முதலீடும் பூஜ்ஜியமாகி இருக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications