கையும் காலும் மொத்தமாக போச்சு! மீனால் வந்த வினை.. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்! என்ன நடந்தது
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வெறும் ஒரு மீனைச் சாப்பிட்டதால் உயிரே போகும் ஆபத்தான சூழலுக்குத் தள்ளப்பட்டார். அவருக்கு எதனால் இப்படி ஆனது என்பதைப் பார்க்கலாம்.
பொதுவாக அசைவ உணவுகளிலேயே அதிகம் நன்மை கொடுக்கும் உணவுகளில் முக்கியமானது மீன். இதில் ஒமேகா 3 போன்ற உடலுக்குத் தேவைப்படும் முக்கிய சத்துக்கள் இருப்பதால் இது முக்கியமானதாகிறது.

இருப்பினும், மீன் அல்லது கடல் சார்ந்த உணவுகளை முறையாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும். சமைப்பதில் சிக்கல் இருந்தால் அது நமது உடலுக்கு மிக மோசமான தீங்கை ஏற்படுத்தும்.
ஷாக் சம்பவம்: இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் அமெரிக்காவில் அரங்கேறி இருக்கிறது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மீனைச் சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் தனது கை, கால்களை இழந்து ஆபத்தான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். அந்த மீனில் இருந்து ஏற்பட்ட பாக்டீரியா தொற்றே அவருக்கு இந்தளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பெண் கெண்டை மீன்களைச் சாப்பிட்டுள்ளார். அதுவே இத்தனைக்கும் காரணமாக இருந்துள்ளது.
அதற்காகக் கெண்டை இன மீன்களே ஆபத்தானது என நினைத்துவிடாதீர்கள். அதில் பல நன்மைகள் கொட்டிக் கிடக்கிறது. இருப்பினும், இந்த பெண் சரியாக வேக வைக்காத கெண்டை மீனைச் சாப்பிட்டுள்ளார். இப்படிச் சரியாக வேக வைக்காத கெண்டை மீனைச் சாப்பிட்டதால் இந்த பெண்ணுக்குப் பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன நடந்தது: கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதான லாரா பராஜாஸ் என்பவருக்குத் தான் இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் பல மாதங்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உயிர் காக்கும் ஆப்ரேஷனும் செய்யப்பட்டு இருக்கிறது.
இது குறித்து அந்த பெண்ணின் நண்பர்கள் கூறுகையில், "அவருக்கு இப்படி ஆனதை எங்களால் ஏற்கவே முடியவில்லை.. சாதாரண மீனைச் சாப்பிட்டதால் அவருக்கு இப்படியொரு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது ரொம்பவே பயங்கரமானது. நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
நாம் சாப்பிடும் உணவில் எந்தளவுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. அந்த ஒரு மீனைச் சாப்பிட்டதால் அவர் உயிரே போய் இருக்கும். மரணத்திற்கு மிக அருகே சென்று திரும்பி இருக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.
கை, கால்கள் போச்சு: உள்ளூர் மீன் சந்தையில் அவர் இந்த ஜிலேபி மீனை வாங்கி சாப்பிட்டதாகத் தெரிகிறது. சாப்பிட்ட உடன் அவரது உடல்நிலை மோசமாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவரது உடல்நிலை நார்மலாகவில்லை. தொடர்ந்து மோசமடைந்த நிலையில், வேறு வழியின்றி அவரை மருத்துவர்களே கோமா நிலைக்குத் தள்ளினர்.
பாதிப்பு ரொம்பவே மோசமாக இருந்த நிலையில், அவரது விரல்கள் கருப்பாக மாறின. விரல்கள் மட்டுமின்றி, பாதங்கள் மற்றும் உதடும் கூட கருப்பாக மாறி இருக்கிறது. அவருக்கு அதீத நோய் எதிர்ப்பு தூண்டல் காரணமாக ஏற்படும் செப்சிஸ் ஏற்பட்டுள்ளது. இரண்டு கிட்னிக்களும் செயலிழந்துள்ளன. மேலும் அவரது கை, கால்கள் அனைத்தும் செயலிழக்கத் தொடங்கி இருக்கிறது.
என்ன பாதிப்பு: அந்த பெண்ணுக்கு விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா பொதுவாக முறையாகச் சமைக்கப்படாத கடல் உணவுகளில் இருக்கும்.. கடலில் இருக்கும் மிகக் கொடூரமான பாக்டீரியாக்களில் இதுவும் ஒன்றாகும். கடல் உணவுகளை நாம் ஏன் முறையாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும்.. இல்லையென்றால் அது எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணமாகும்.
இந்த பாக்டீரியா இருக்கும் ஒரு மீன் அல்லது கடல் உயிரினங்களைச் சாப்பிட்டால் இந்த பாக்டீரியா நம் உடலுக்குள் புகுந்துவிடும்.. அல்லது இந்த பாக்டீரியா இருக்கும் நீர் நமது உடலில் இருக்கும் எதாவது காயத்தில் பட்டாலேயே அதன் வழியாக நமது உடலில் புகுந்துவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாம் ரொம்ப ரொம்ப கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications