"ரத்தம் குடிக்கும் இளம்பெண்.." அதுவும் தினசரி.! இது கதையல்ல நிஜம்.. மிரண்டு ஓடிய பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரத்தத்தை குடிக்கும் ரொம்பவே வினோதமான பழக்கத்தை கொண்ட பெண் ஒருவர் தனது இந்த பழக்கம் குறித்து டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அமெரிக்காவில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விசித்திரமான நடத்தைகள் குறித்த டிவி ஷோ ஒன்று நடைபெற்றது. அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வினோதமான பழக்கம் கொண்டவர்கள் கலந்து கொண்டனர்.

How a Woman was Addicted To Drinking Blood daily in USA

அதில் ஒரு ஷோவில் இளைஞன் ஒருவர் தன்னிடம் இருக்கும் பொம்மைகளுடன் ரொம்பவே இணக்கமான ஒரு உறவை கொண்டு இருப்பதாக கூறுகிறார். அவருக்கு எதாவது பிரச்சினை என்றால் அவர் அந்த பொம்மையிடம் தான் சென்று புலம்புவாராம்.

அதேபோல அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு பெண் அழகுசாதன பொருட்களை எடுத்து கொள்வதில் அடிமையாகவே இருக்கிறார். அவரால் அழகு சாதன பொருட்களை எடுத்துக் கொள்ள முடியாமல் இருக்கவே முடியாதாம். ஆனால், அனைத்தையும் விட கடைசி எபிசோட்டில் பெண் சொன்ன விஷயம் அனைவரையும் அதிர வைப்பதாக இருந்தது. அதாவது அந்த பெண்ணுக்கு வினோதமாக ரத்தத்தை குடிக்கும் பழக்கம் இருக்கிறதாம்.

திருமணத்திற்கு பிறகும்.. மற்ற பெண்கள் மீது ஆசைப்படும் 60% இந்தியர்கள்! ஷாக் சர்வே முடிவுகள்


தினமும் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் ரத்தத்தை குடிக்க விரும்பவதாக அந்த பெண் கூறுகிறார். அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லான்காஸ்டரைச் சேர்ந்த 29 வயதான மிச்செல் என்ற பெண்ணுக்கு தான் இந்த வினோத பழக்கம் இருக்கிறது. அவர் இளம் வயதிலேயே ஒரு முறை பன்றியின் ரத்தத்தை குடித்துள்ளார். அதன் டேஸ்ட் பிடித்து போகவே அதையே ஒரு பழக்கமாக அந்த பெண் வைத்து கொண்டார். இப்போது அவர் ரத்தத்திற்கு அடிமையாகவே மாறிவிட்டார்.

இப்போது ரத்தத்தை குடிக்காமல் அவரால் இருக்கவே முடிவதில்லையாம், இந்த ரத்தத்தை குடிப்பதால் தனக்கு உற்சாகம் கிடைப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். சில சமயம் நேரடியாக டம்ப்ளரில் ஊற்றி குடித்துவிடுவாராம். இன்னும் சில சமயம் உணவில் சேர்த்து சாப்பிடுவாராம். இப்படி ஏதாவது ஒரு வழியில் ரத்தத்தை குடித்தால் மட்டுமே அன்றைய நாள் முழுமையடைந்த உணர்வு கிடைப்பதாக அந்த பெண் கூறியுள்ளார்.

How a Woman was Addicted To Drinking Blood daily in USA

இது குறித்து அந்த பெண் மேலும் கூறுகையில், "​எனக்கு, ரத்தமும் தண்ணீரும் ரொம்ப முக்கியம். தண்ணீரை போலவே ரத்தத்தையும் நான் குடிக்க வேண்டும். படிக்கும் போது, ​​ஓய்வெடுக்கும் போது, ​​டிவி பார்க்கும்போது அல்லது ஓவியம் வரையும்போது என எல்லா நேரமும் எனக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தம் குடிக்காமல் என்னால் இருக்கவே முடிவதில்லை. தினமும் காலையில் காபியில் ரத்தத்தை கலந்து குடிப்பேன்.

பன்றி ரத்தம், மாட்டின் ரத்தம் என தினசரி ஏதாவது எனக்கு தேவை. அதேநேரம் எல்லா ரத்தமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. என்னை பொறுத்தவரை எனக்கு பசுவின் ரத்தத்தை விட பன்றியின் ரத்தம் தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் இதை விட எனக்கு மனித ரத்தம் பிடிக்கும். இதற்காக என்னை வாம்பயர் என்று முத்திரை குத்தாதீர்கள். நான் ரத்தத்தை விரும்பும் சாதாரண ஒரு நபர் அவ்வளவு தான்" என்றார்.

டீன் ஏஜ் பருவத்தில் அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வாழ்க்கையே வெறுப்பாக மாறியதாம். அந்த நேரத்தில் முட்டாள்தனமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது தான் எதிர்பாராத விதமாக ரத்தத்தை சுவைத்துள்ளார். அதுவே அவரது உயிரையும் காப்பாற்றியதாம். மனச்சோர்வில் இருந்து வெளியே வரவும் அது உதவியதாக அந்த பெண் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "நான் என்னை பற்றி கூறும் போது சிலர் பயந்துவிடுவார்கள். ரத்தம் குடிப்பது மதுவை குடிப்பது போல தான்.. எனக்கு இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. சளி பிடித்து இருக்கும் போது சூடான ஒரு பானத்தை குடித்தால் எப்படி இருக்கும். ரத்தத்தை குடிக்கும் போது எனக்கும் அப்படி தான் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் நான் சுமார் 3800 லிட்டர் ரத்தத்தை குடித்துள்ளேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+