திருமணத்திற்கு பிறகும்.. மற்ற பெண்கள் மீது ஆசைப்படும் 60% இந்தியர்கள்! ஷாக் சர்வே முடிவுகள்
டெல்லி: நமது நாட்டில் திருமணமான இளைஞர்களில் சுமார் 60% பேர் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருக்க ஆசைப்படுவது சமீபத்தில் வெளியான புதிய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
நமது நாட்டில் குடும்ப முறை என்பது ரொம்பவே பாரம்பரியமான ஒன்றாக இருந்துள்ளது. இங்கே ஒரு ஆண் ஒரு பெண் உடன் இணைந்து வாழ்வதே குடும்பமாக இருக்கிறது. ஆனால், இந்த நிலை விரைவில் மாற உள்ளதைப் போலத் தான் தெரிகிறது.

இது குறித்து டேட்டிங் செயலியான க்ளீடன் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள திருமணமான ஆண்களும் கூட மற்ற பெண்கள் மீது ஆசைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
புதிய ஆய்வு: க்ளீடன் என்ற இந்த நிறுவனம் இந்தியாவில் திருமணம், திருமணத்திற்குப் புறம்பான உறவு மற்றும் கலாச்சாரம் குறித்து இந்தியாவில் மாறிவரும் அணுகுமுறைகள் குறித்து க்ளீடன் ஒரு ஆய்வை நடத்தியது. முக்கிய மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் வசிக்கும் 25 முதல் 50 வயதான 1,503 திருமணமான இந்தியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
Marriage VS Wedding.. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு தெரியுமா? இவ்ளோ நாள் இதுகூட தெரியாம போச்சே
60% இந்தியர்கள்: அதில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் "ஸ்விங்கிங்" போன்ற டேட்டிங் முறையை ஏற்றுக் கொண்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது திருமணமான நபர் அல்லது திருமணமாகாத நபர் என யாராக இருந்தாலும் சில காலம் உடலுறவுக்காக மட்டும் ஒன்றாக இருப்பதே "ஸ்விங்கிங்" முறையாகும். இதுவரை இந்தியாவில் எந்தவொரு உறவிலும் காதலும் அன்பும் முக்கியம் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், அதற்கு நேர்மாறாக இது இருக்கிறது.

நாம் ஒரு விஷயத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது திருமணமான ஒருவர் மற்றொருவருடன் உடலுறவு கொள்வது மட்டும் துரோகம் இல்லை. திருமணத்திற்குப் பிறகு வேறு ஒருவருடன் எமோஷ்னலாக அதாவது மன ரீதியாக நல்லுறவு இருந்தால் அதுவும் துரோகம் தான். இந்தியாவில் திருமணத்திற்கு பிறகும் சுமார் 46% ஆண்கள் இதுபோல இருக்கிறார்களாம். அதில் கொல்கத்தாவில் தான் அதிகமாக இருக்கிறது.
இந்த டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைனில் மற்றவர்களுடன் flirt செய்து பேசுவது என்பதும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது சுமார் 36 சதவீத பெண்களும், 35 சதவீத ஆண்களும் இதுபோல செய்கிறார்களாம். கொச்சியில் தான் அது அதிகம் இருக்கிறது.
புது சர்வே: தங்கள் பாட்னரை தவிர வேறு ஒருவருடன் இருப்பது போலக் கனவு காண்பது குறித்தும் சர்வே நடத்தப்பட்டது. இது உங்களுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், இதையும் ஒரு முக்கிய விஷயமாகவே பார்க்கிறார்கள். இந்த சர்வேயில் 33 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் இதுபோல கனவு காண்பதாக அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜெய்ப்பூர் 28 சதவிகிதம் மற்றும் லூதியானாவில் 37 சதவிகிதமாக இது இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஆண் ஒருவர் பெண் ஒருவருடன் இருப்பதே எப்போதும் கன்னியமிக்க உறவாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், இப்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் அந்த நிலை மாறி வருவதையே இந்த ஆய்வு காட்டுகிறது. இந்த காலகட்டத்தில் இளைஞர்களிடையே உறவுகள் எப்படி உருவாகிறது.. அதை எப்படி இந்தியர்கள் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவுகிறது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications