Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நூற்றாண்டில் இல்லாத பாதிப்பு! "சூறாவளி பாம்.." உறைந்தே உயிரிழந்த அமெரிக்கர்கள்! என்ன தான் காரணம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவை இப்போது மிக மோசமான ஒரு பனிப்புயல் புரட்டிப் போட்டுள்ளது. அங்குக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களையே முற்றிலும் புரட்டிப் போட்ட இந்த பனிப்புயலால், மொத்தம் 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் உலகின் அனைத்து நாடுகளிலும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பருவநிலை மாற்றம் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது.. உலகெங்கும் பாதிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

 பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்

ஐரோப்பாவில் சில மாதங்களுக்கு முன்பு, பெய்த கனமழை அங்குப் பல நாடுகளை மிக மோசமாகப் பாதித்தது. வளர்ந்த நாடாகக் கருதப்படும் ஐரோப்பிய நாடுகளிலேயே இந்தப் புயலால் பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல இந்தாண்டு கோடைக் காலத்தில் அமெரிக்காவில் வெப்பம் உச்சம் தொட்டது. பல மாகாணங்களில் வெப்பம் 100+ பாரன்ஹீட்டை தாண்டியது. இதனால் அப்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் பல நூறு பேர் உயிரிழந்தனர்.

 அமெரிக்கா

அமெரிக்கா

கோடைக் காலத்தில் எந்தளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டதோ, இப்போது குளிர் காலத்திலும் அதே அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூறாவளி பாம் எனப்படும் பனிப்புயல் அமெரிக்காவையே புரட்டிப் போட்டுவிட்டது. பொதுவாக அங்குக் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை விடுமுறை இருக்கும். அங்குக் கொண்டாடப்படும் மிக முக்கிய விழாவாக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை இருக்கும். ஆனால், இந்த பனிப்புயல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை காலி செய்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்களில் மட்டும் பல ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

 60 பேர் பலி

60 பேர் பலி

இந்தப் புயலால் நியூயார்க்கில் இதுவரை 27 பேரும், அமெரிக்கா முழுவதும் குறைந்தது 60 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அங்குள்ள பப்பல்லோ பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குச் சாலைகளில் மிகத் தடிமனான பனி சேர்ந்துள்ள நிலையில், வாகனங்கள் சாலையில் வழுக்கிச் செல்கிறது. இதனால் அங்குப் பாதுகாப்பற்ற ஒரு சூழலே நிலவுகிறது. அதை நீக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.

 நூற்றாண்டில் இல்லாத பாதிப்பு

நூற்றாண்டில் இல்லாத பாதிப்பு

இந்த பனிப்புயலை நூற்றாண்டில் ஏற்படாத மிக மோசமான பனிப்புயல் என்று அங்குள்ள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.அங்குப் பல மாகாணங்களில் சுமார் 9 இன்ச், அதாவது 23 செமீ மேல் னி பெய்துள்ளது. தொடர்ந்து 14 முதல் 18 மணி நேரம் வரை பனி பெய்துள்ளது. இதனால் அங்கு மின்சார சப்ளேயில் கூட பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வீடுகளைக் கதகதப்பாக வைத்திருக்க ஹீட்டரை கூட பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள முதியவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர்.

 அதிபர் பைடன்

அதிபர் பைடன்

இந்த மோசமான பனிப்புயலால் அங்குப் பல லட்சம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வானிலை சற்று முன்னேறி வருவதாகவும் விரைவில் விமானச் சேவை வழக்கமான நிலையை அடையும் என்று அங்குள்ள சவுத்வெஸ்ட் ஏர்லைன் தெரிவித்துள்ளது. இப்போது அங்கு மெல்லப் பனிப்புயலின் தாக்கம் குறைந்து வருகிறது. இதற்கிடையே இந்த பனிப்புயலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நியூயார்க் ஆளுநருடன் அமெரிக்க அதிபர் பைடன் தொலைப்பேசி வழியாகப் பேசினார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

 சூறாவளி பாம்

சூறாவளி பாம்

இந்த சூறாவளி பாம் என்பது குளிர் மற்றும் வறண்ட காற்று ஒன்றுடன் ஒன்று மோதுவதால் உருவாகிறது. சூடான காற்று மேலே எழுப்பி, ​​ஒரு மேக அமைப்பை உருவாக்குகிறது. இது காற்றழுத்தத்தையும் குறைக்கிறது. இது குறைந்த அழுத்தப் பகுதியைச் சுற்றி எதிரெதிர் திசையில் சுற்றும் போது பனிப் புயல் உருவாகிறது. குளிர் காற்று இதில் மோதும்போது வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே ஆபத்தான நிலைக்குச் செல்லும். இப்போது இதுபோன்ற பாதிப்பு தான் அங்கு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பனிப்புயல் அங்கு வழக்கமாக ஏற்படும் என்றாலும் கூட இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒன்றாக இருந்துள்ளது.

 குழம்பிய ஆய்வாளர்கள்

குழம்பிய ஆய்வாளர்கள்

இந்தளவுக்குப் பாதிப்பு மோசமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நினைக்கவில்லை. இந்தப் பனிப்புயல் இந்தளவுக்குத் தீவிரமாக இருப்பதற்குக் காலநிலை மாற்ற நெருக்கடி முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் வளிமண்டலம் அதிக நீராவியை எடுத்துச் செல்லக்கூடியது, இது இப்போது எரிபொருளாகச் செயல்படுகிறது என்று போல்டரின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் தேசிய பனி மற்றும் பனி தரவு மையத்தின் இயக்குநர் மார்க் செரிஸ் தெரிவித்துள்ளார் இருப்பினும், வரும் நாட்களில் நிலைமை மெல்லச் சீராகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+