"வீடியோ கேம் மூலம் பிறந்த குழந்தை.." இனி குழந்தையின்மை பிரச்சினையே இல்லை.. வாவ் சூப்பர் தான்
வாஷிங்டன்: உலகெங்கும் குழந்தையின்மை இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் விந்தணு ரோபோ மூலம் வெற்றிகரமாகக் குழந்தை பிறந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
இந்த நவீன உலகில் துரித உணவுகள், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டே வருகிறது. இதனால் முன்பு அரிதாக இருந்த உடல்நிலை பாதிப்புகளும் பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.
குறிப்பாகக் குழந்தையின்மை என்பது உலகெங்கும் முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. குழந்தையின்மை பிரச்சினையைச் சரி செய்ய இப்போது பலரும் பல விதமான ஆய்வுகள் நடந்தே வருகிறது.

குழந்தை: புதுப்புது முறைகளைப் பயன்படுத்தி இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டே வருகிறது. இதனிடையே விந்தணுக்களை மைக்ரோ ரோபோக்கள் மூலம் அனுப்பப்படும் சோதனை முறை இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை முறையில் கருவுற்ற முதல் பெண் இப்போது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இது விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (IVF) சிகிச்சைக்கான செலவை வெகுவாக குறைக்கும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடனேயே இருக்கிறது. ஸ்பெயின் பார்சிலோனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, நியூ யார்க் நகரத்தில் உள்ள நியூ ஹோப் ஃபெர்ட்டிலிட்டி சென்டரில் விந்தணுக்களை முட்டைக்குள் செருக ரோபோடிக் ஊசியைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த செயல்முறை மூலம் இரண்டு ஆரோக்கியமான கருக்கள் உருவாகிய நிலையில், இப்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

கருவூட்டல் ரோபோ: உலகின் முதல் கருவூட்டல் ரோபோவில் பணிபுரியும் பொறியாளர்களில் ஒருவருக்குக் கருவுறுதல் துறையில் அதிக அனுபவமே இல்லையாம். இது குறித்து மேலும் கூறுகையில், "கருவுறுதல் துறையில் அனுபவம் இல்லாத பொறியாளர் ஒருவர், ரோபோ ஊசியை நிலைநிறுத்த பிளே ஸ்டேஷன் 5 என்ற வீடியோ கேம் கண்டிரோலரை பயன்படுத்தினார். கேமரா மூலம் முட்டை எங்கே இருக்கிறது என்பதைப் பார்த்துள்ளனர். அது தானாகவே முன்னோக்கி நகர்ந்து, முட்டையை ஊடுருவி, ஒரு விந்தணுவை மட்டும் வெளியேற்றியுள்ளது" என்றார்.
இதனால் ஆய்வில் ஈடுபட்ட இருவர் கர்ப்பமடைந்தனர். கர்ப்ப காலத்திலும் அவர்களின் உடல்நிலை சீராக ஆய்வு செய்யப்பட்டது. இந்தச் சூழலில் தான் இந்த முறையில் கருவுற்ற பெண்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் நிச்சயம் செயற்கை கருவுறுதல் முறையின் செலவைக் குறைக்கும் என்றே ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செலவைக் குறைக்கும்: விந்தணுவைச் சுமந்து செல்லும் இந்த ரோபோவை ஓவர்ச்சர் லைஃப் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் உருவாக்கியுள்ளது. செயற்கை முறையில் கருத்தரிக்கும் IVF தொழில்நுட்பத்தை ஆட்டோமேட்டிக் நிகழ்வாக மாற்றுவதே இவர்கள் வேலையாகும். இதன் மூலம் செயற்கை கருவுறுதல் சிகிச்சைக்கான செலவு கணிசமாகவே குறையும். தற்போது, IVF மூலம் சிகிச்சை பெற லட்சக் கணக்கில் செலவாகிறது.

இதற்கு மெல்லிய ஊசிகளைப் பயன்படுத்தி முட்டை மற்றும் விந்தணுக்களைக் கையாளும் பயிற்சி பெற்ற ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் இந்த செயல்முறை அதிக செலவை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் இந்த IVF மூலம் சுமார் 5,00,000 குழந்தைகள் பிறக்கின்றன, ஆனால் இதன் விலை அதிகம் என்பதால் பலருக்கும் இதற்கான வாய்ப்பு வசதி அமைவதில்லை.
மிகப் பெரிய புரட்சி: இது குறித்து ஆய்வாளர் சாண்டியாகோ முன்னே கூறுகையில், "இந்தத் தொழில்நுட்பம் இப்போது தான் தொடக்க நிலையில் இருக்கிறது. ஆனால், இதுதான் IVF சிகிச்சையின் அடுத்தகட்டம். இது வளர்ந்து ஒரு நாள் நோயாளிகள் கருவுறுதல் கிளினிக்கிற்குச் செல்வதற்கான தேவையையே நீக்கிவிடும். செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்கப் பல லட்சம் செலவாகும் நிலையில், அந்த நிலையை இது நிச்சயம் மாற்றும்.. கருவுறுதலில் பிரச்சினை இருக்கும் பலருக்கும் இது நிச்சயம் உதவும்" என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications