அதென்ன "அரசு முறை" பயணம்.. பிரதமரின் முந்தைய அமெரிக்க பயணங்களில் இருந்து இது வேறுபடுவது எப்படி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பிரதமர் மோடி ஏற்கனவே சில முறை அமெரிக்கா சென்றிருந்தாலும் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்வது இதுவே முதல் முறை. அரசு முறை என்றால் என்ன.. அது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

Recommended Video

    China-வின் அதிரடி வியூகத்தால் மாற்றங்கள் வரும்? Dollar Vs Yuan | America

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். பிரதமர் மோடி செல்லும் விமானம் இந்திய நேரப்படி நாளை (ஜூன் 21) அதிகாலை 1.30 மணிக்கு தரையிறங்கும்.

     How state trip is different from other as PM Modi visits US for state trip

    அவரது விமானம் வாஷிங்டனில் உள்ள விமானப்படைத் தளத்தில் தரையிறங்க உள்ளது. மோடி பிரதமரான பிறகு அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறையாகும். இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

    விசா மறுப்பு: கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு பிறகு மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகக் குஜராத்தில் பெரிய வன்முறை ஏற்பட்டது. இதில் நுற்றுக்கணக்காணோர் கொள்ளப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர், அப்போதைய குஜராத் முதல்வர் மோடி அமெரிக்கா செல்ல விசா கோரியிருந்தார்.

    இருப்பினும், குஜராத் வன்முறையைக் காரணம் காட்டி அமெரிக்கா விசா மறுத்தது. கடந்த 2014 தேர்தல் வரையில் இதே நிலை தான் இருந்தது. மோடி 2014இல் வென்று பிரதமரான பிறகே அமெரிக்கா விசா வழங்க முன்வந்தது. வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் தூதர்களுக்கு வழங்கப்படும் ஏ1 விசா வழங்கப்பட்டது.

    இதற்கிடையே கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. இது தனிக்கதை. இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி முதல் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

    பிரதமர் மோடி: அமெரிக்கா கிளம்பும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இரு நாடுகளுக்கும் இடையே கூட்டணியை வலிமைப்படுத்தும் விதமாக இந்த பயணம் இருக்கும்" என்றார். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி இதற்கு முன்பு ஏற்கனவே பல முறை அமெரிக்கா சென்றுள்ளார் என்ற போதும், அரசு முறை பயணமாகச் செல்வது இதுவே முதல்முறையாகும். அதென்ன அரசு முறை பயணம்.. இதற்கு முந்தைய பயணங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம்.

    இருதரப்பு நட்புறவின் வெளிப்பாடாக அரசு முறை பயணம் அமையும். இதில் முதலில் ஒரு நாட்டின் தலைவர் அழைப்பு விடுப்பார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு மற்றொரு நாட்டின் தலைவர் அங்கே செல்வார்கள். உதாரணத்திற்கு முதலில் அமெரிக்க அதிபர் பைடன் அமெரிக்காவுக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்தே பிரதமர் மோடி இப்போது சென்றுள்ளார்.

    அரசு முறை பயணம் என்றால் என்ன: இது வழக்கமான பயணத்தைக் காட்டிலும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை உள்ளடக்கி இருக்கும். மேலும், அமெரிக்காவில் அரசு முறை பயணத்தின்போது வெள்ளை மாளிகையில் அதிபரும் அவரது மனைவியும் இரவு விருந்தையும் அளிப்பார்கள். இரு நாடுகளுக்கும் இடையே மிகச் சிறந்த உறவு இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கும்.

    நெருங்கிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா கொடுக்கும் மரியாதையே இந்த அரசு முறை பயணம்.. பொதுவாக ஒரு அரசு முறை பயணத்தைத் திட்டமிட அமெரிக்கா ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இதில் வழங்கப்படும் அரசு விருந்தின் மெனு கூட பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்படும். பொதுவாக வரும் விருந்தினரின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே மெனு இருக்கும்.

    சில நாட்கள் வரை இருக்கும் அரசு முறை பயணங்கள் பல விரிவான நிகழ்வுகளைக் கொண்டிருக்கும். பரிசுப் பொருட்கள் பரிமாறப்படும், மேலும், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பும் அளிக்கும். மற்ற பயணங்களைக் காட்டிலும் அரசு முறை பயணத்திற்கு உட்சபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும். சரி, இப்போது பிரதமர் மோடியின் முந்தைய பயணங்கள் குறித்துப் பார்க்கலாம்.

    முந்தைய பயணங்கள்: 2014இல் பிரதமராக பொறுப்பேற்று சில மாதங்களில் அமெரிக்கா சென்று அப்போதைய அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமரான பிறகுச் சென்ற மோடிக்கு அங்கே இந்தியர்கள் உற்சாக வரேவற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து 2015இல் ஐநா மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி அங்கே சென்றார். பின் 2016இல் மீண்டும் ஒரு முறை அமெரிக்கா சென்றார். அப்போது தான் பிரதமர் மோடி முதல்முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

    அதன் பிறகு டிரம்ப் அதிபரான பிறகு 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். பின், 2019இல் மீண்டும் அமெரிக்கா சென்ற அவர், டிரம்புடன் இணைந்து "ஹவுடி மோடி" என்ற பிரம்மாண்ட நிகழ்விலும் கலந்து கொண்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+