அமெரிக்கா செல்ல ஹெச்1-பி விசாவுக்கு மார்ச் 1 முதல் அப்ளை செய்யலாம்.. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி
H-1B விசா கோரி விண்ணப்பிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: H-1B விசா பெற விரும்புவோர் நாளை மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமெரிக்கக் குடியுரிமை துறை அறிவித்துள்ளது. ஹெச்-1 பி பதிவு முறையான myUSCIS மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஐடி ஊழியர்களுக்கு எப்படியாவது வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதே இலக்காக இருக்கும். அதிலும் அமெரிக்கா தான் எப்போதும் அவர்கள் செக் லிஸ்டில் டாப்பில் இருக்கும்.
இருப்பினும், அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது எல்லாம் அவ்வளவு எளிதான வேலை இல்லை. ஐடி உள்ளிட்ட குறிப்பிட்ட வேலைகளைச் செய்பவர்களுக்கு ஹெச் 1 பி விசா தான் வழங்கப்படும்.

ஹெச் 1 பி விசா
H-1B விசா பெற விரும்புவோர் நாளை மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமெரிக்கக் குடியுரிமை துறை அறிவித்துள்ளது. ஹெச்-1 பி பதிவு முறையான myUSCIS மூலம் ஆன்லைனிலேயே ஹெச்-1 பி கோரும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பி விசா கோரி விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களுக்கும் தனியாக ஒரு பதிவு எண் ஒதுக்கப்படும். இந்த பதிவு எண் டிராக் செய்ய மட்டுமே பயன்படும்.. இந்த எண்ணை வைத்துக் கொண்டு ஆன்லைனில் நமது விண்ணப்பத்தின் இறுதி நிலையை அறிய முடியாது.

அடையாள எண்
ஹெச் 1 பி விசா என்பது அமெரிக்க நிறுவனங்கள் நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்புப் பதவிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாவில் தான் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல ஆயிரம் ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் பணி அமர்த்துகிறது. விசா கோரி விண்ணப்பிக்கும் போது, உறுதி செய்யும் வகையில் கன்பர்மெஷன் எண் வரும். அதை வைத்து விண்ணப்பத்தை டிராக் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 டாலர் செலுத்த வேண்டும்
இதற்காகத் தனியாக ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். அதில் இருந்து விண்ணப்பிக்கும் போது கட்டணமாக 10 டாலர் செலுத்த வேண்டும். இது குறித்து வெளியான அறிவிப்பில், "எச்-1பி கோரி விண்ணப்பிக்கும் நபர்கள் அல்லது அவர்கள் பிரதிநிதிகள் மின்னணு முறையில் பதிவு செய்ய myUSCIS ஆன்லைன் கணக்கைப் பயன்படுத்த வேண்டும்.. ஒவ்வொரு பதிவுக்கும் $10 டாலரை பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்

எப்போது முதல்
அதேபோல பதிவாளர்களாகப் பதிவு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களைப் பதிவு செய்யலாம்.. வரும் பிப். 21 முதல் புதிய கணக்குகளையும் ஓபன் செய்யலாம்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விசா கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து 2024இல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எப்படி
விசா கோரி விண்ணப்பிக்க விரும்புவோர் myUSCICஇல் கணக்கை உருவாக்க வேண்டும். மேலும், விண்ணப்பக் கட்டணமாக $10 செலுத்த வேண்டும். https://myaccount.uscis.gov/users/sign_up இந்த லிங்கில் சென்று கணக்கு ஓபன் செய்யலாம். தங்களுக்காக விண்ணப்பிக்கும் நபர்கள் "registrant" என்ற பிரிவைப் பயன்படுத்த வேண்டும். புதிய கணக்கைத் தொடங்க பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கும்.. கணக்கு உருவாக்கிய பிரதிநிதிகள் சேர்ந்த பிறகு.. எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு
தனிப்பட்ட தகவல்களை பிப். 1ஆம் தேதி முதல் நிரப்பலாம். அப்போது தான் 10 டாலரை விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பலருக்கும் விண்ணப்பத்தை நிரப்பலாம். பணம் செலுத்தும் வரை தகவல்களைத் திருத்தவும், எடிட் செய்யவும், சேமிக்கவும் முடியும். இறுதி செய்யப்பட்ட தகவல்களை மார்ச் 31 ஆம் தேதிக்குள் பகிரப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. மார்ச் 17க்குள் துறை போதுமான விண்ணப்பங்கள் வந்திருந்தால், ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டு myUSCISஇல் நோட்டிபிக்கேஷன் அனுப்பப்படும். இது வந்த பிறகு அடுத்த 90 நாட்களில் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து செயல்முறையை முடிக்க வேண்டும்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications