வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு எதிராக ஆவேசமாக ஐ.நா. போன சீனா.. அசராத உலக நாடுகள்.. மூக்குடைபட்ட பரிதாபம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் இந்தியா எடுத்த முடிவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதம் நடத்துவதற்கு சீனா முயற்சி செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா எடுத்த இந்த முயற்சிக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் மூக்குடைபட்டுள்ளது அந்த நாடு.

Recommended Video

    Jammu Kashmir விவகாரம்.. ஐநா சபையில் மூக்குடைபட்ட China

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றி மத்திய அரசு முடிவெடுத்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.

    ஒரு பக்கம் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மூக்கை நுழைத்து வருவதால் அதன் கோபம் இந்தியா பக்கம் திரும்பியது. லடாக் பிராந்தியத்தில் பல பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருவதால் இந்தியாவின் இந்த முடிவால் அந்த நாடும் அதிர்ச்சி அடைந்தது.

    சீனாவில் பரவும் புதிய வைரஸ்...டிக் போர்ன்...7 பேர் உயிரிழப்பு... மனிதனுக்கு மனிதன் பரவுமா? சீனாவில் பரவும் புதிய வைரஸ்...டிக் போர்ன்...7 பேர் உயிரிழப்பு... மனிதனுக்கு மனிதன் பரவுமா?

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

    ஆனால், இந்த முடிவின் மூலமாக, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களில் உரிமையை மேலும் வலுப்படுத்திக் கொண்டது இந்தியா. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், கிளப்புவதற்கு அதன் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    மீண்டும் முயன்ற சீனா

    மீண்டும் முயன்ற சீனா

    தற்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. எனவே சூட்டோடு சூடாக இந்த பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்பிவிட வேண்டும் என்று சீனா முயற்சி செய்துள்ளது.

    மூக்குடைப்பு

    மூக்குடைப்பு

    எழுத்துப்பூர்வமான கோரிக்கையை பாகிஸ்தான் முன்வைக்க, இதற்கு சீனா ஆதரவு அளித்ததாகவும், ஆனால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் இதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் சீனா மூக்குடைபட்டதாகவும் இந்திய தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரு நாட்டு பிரச்சினை என்பதால் அதை விவாதம் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஏற்ற இடம் கிடையாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த பிரச்சனையை அங்குதான் விவாதிக்க வேண்டும் என்று சீன வலியுறுத்துகிறது.

    லடாக் பிரச்சினை

    லடாக் பிரச்சினை

    இருப்பினும், நிரந்தர உறுப்பு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாலும், இந்த விவகாரத்தை அதற்குமேல் சீனாவால் கொண்டு செல்ல முடியவில்லை. இப்போது மறுபடியும் முயற்சி செய்து சீனாவுக்கு தோல்வி மிஞ்சியுள்ளது. லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது சீன ராணுவம், மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையிலும் காய் நகர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இரண்டு பக்கமும் சீனாவால் முன்னேற முடியவில்லை என்பது தான் எதார்த்தம் என்கிறார்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரத்தில்.

    உறவு பாதிப்பு

    உறவு பாதிப்பு

    சீனாவின் இந்த நடவடிக்கையால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புதான் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    English summary
    China try to raise Jammu and Kashmir and Ladakh issue in United Nations Security Council meet but other permanent countries including US didn't given support to China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X