இந்தியா- பாக். இடையே சண்டை நிறுத்தம்! விடிய விடிய சமாதானம் பேசிய டிரம்ப்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாஷிங்டன்: ஆபரேன் சிந்தூர் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தி வந்தது. அதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வந்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாகச் சண்டை தொடர்ந்து வந்தது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவிரமாக முயன்றது. இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரை இந்திய ராணுவம் கடந்த மே 7ம் தேதி நடத்தியது. பாகிஸ்தானில் இறங்கி அடித்த இந்தியா, தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து அடித்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான்
இந்தத் தாக்குதலைக் கண்டு பொறுக்காத பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே எல்லையில் முக்கிய நகரங்களைக் குறிவைத்து இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் இரண்டு நாட்கள் பாக். ட்ரோன்களை இந்தியா வீழ்த்த மட்டுமே செய்தது. ஆனால், நேற்றைய தினம் பாகிஸ்தான் மீது இந்தியா இறங்கி அடித்தது. பாகிஸ்தானில் உள்ள சுமார் 6 ஏர் பேஸ்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா காலி செய்தது. பாகிஸ்தான் இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இந்தியா பாகிஸ்தான்
இது ஒரு பக்கம் இருக்க இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் முயன்றன. குறிப்பாக அமெரிக்கா இதில் தீவிர முயற்சியை எடுத்து வந்தது. இதற்கிடையே சண்டையை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்,
இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என்று கூறியுள்ள டிரம்ப், இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.. மேலும், மிக நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "அமெரிக்காவின் மத்தியஸ்தம் செய்ய இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025
போர் நிறுத்தம்
இந்தியா பாகிஸ்தான் இடையே சமாதானம் செய்து வைக்க நீண்ட நேரமாக அமெரிக்கா முயன்றதாகவும் பல மணி நேர முயற்சிக்கு பிறகே இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலால் இந்தியாவில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், போர் நிறுத்தம் என்பது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இந்தத் தகவல்களை மத்திய அரசு முதலில் இதை உறுதி செய்யாமல் இருந்தது. இப்போது வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்திரி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். மிக குறுகியதாக இருந்த அந்த செய்தியாளர் சந்திப்பில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அவரும் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications