மோடியிடம் கெஞ்சிய டிரம்ப்! நோபல் பரிசு டிமாண்ட்டை நிராகரித்த பிரதமர்! ஜூன் 17 போன்கால் ரகசியம்
வாஷிங்டன்: பிரதமர் மோடிக்கு போன் செய்த டொனால்ட் டிரம்ப் தன்னை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யும்படி கெஞ்சியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்பதை சொல்லி நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். அதனை மோடி ஏற்காததால் தான் இந்தியாவுக்கு டிரம்ப் வரியை தீட்டி உள்ளதாக அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு கடந்த ஜூன் 17 ம் தேதி மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டிரம்ப் பேசியது தொடர்பான விவரங்களும் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பால் அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டிரம்ப் தனது நட்பு நாடாக உள்ள ஐரோப்பிய நாடுகளையும் இந்தியா மீது வரி விதிக்க அழுத்தம் கொடுத்து வருகிறார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் அமெரிக்காவை போல் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்காவை போல் இந்தியாவுக்கு கூடுதல் வரி மற்றும் 2ம் நிலை பொருளாதார தடைகளை விதிக்க டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையே தான் தற்போது இன்னொரு பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தன்னை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யும்படி பிரதமர் மோடியிடம் கெஞ்சினாராம். அதற்கு மோடி பரிந்துரை செய்ய மறுத்துவிட்டாராம். இதுதொடர்பாக அமெரிக்காவில் வெளியாகி வரும் பிரபல நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ‛கடந்த ஜூன் 17 ம் தேதி இந்திய பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி செய்தார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் போரை கடந்த மே மாதம் நிறுத்தியது நான் தான் என்று தெரிவித்தார். இந்த போரை நிறுத்தியதில் பெருமைப்படுகிறேன். இந்த போர் நிறுத்தம் செய்ததற்காக பாகிஸ்தான் என்னை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. நீங்களும் (மோடி) என்னை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்'' என்று பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசியிருந்தார்.
ஆனால் டிரம்பின் இந்த கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்க மறுத்துவிட்டார். இந்தியா - பாகிஸ்தான் போரில் மூன்றாவது நாடுகளின் தலையீடு எதுவும் இல்லை. பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதில் அமெரிக்காவின் பங்கு இல்லை என்பதை கூறிவிட்டார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய முடியாது என்று ஆணித்தனமாக கூறிவிட்டார்.
இது டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் டிரம்ப் இந்தியாவுக்கு தலா 25 சதவீதம் என்று இருகட்டங்களாக 50 சதவீத வரியை விதித்துள்ளார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications