இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தானின் மோதல் அதிகரிக்கலாம்.. அமெரிக்க உளவுத்துறை பகீர் வார்னிங்..என்னாச்சு?
இந்தியாவுக்கும், அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
வாஷிங்டன்: சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மோதல் என்பது வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் இது கவலைக்குரிய விஷயம் எனவும், மோடி தலைமையிலான இந்திய அரசு முந்தைய காலத்தை விட தற்போது சீனா, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கலாம் எனவும் அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோதலுக்கான காரணம் என்ன? மோதலின்போது என்ன நடக்கும் என்பது பற்றிய பகீர் தகவலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளாக சீனா, பாகிஸ்தான் உள்ளது. இந்த நாடுகள் இந்தியாவின் பகுதிகளை சொந்தம் கொண்டாடி வருகின்றன. சீனா அருணாச்சலபிரதேசம், லடாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு சொந்த கொண்டாடி வரும் நிலையில் பாகிஸ்தான் காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுகிறது.
மேலும் இதுதொடர்பாக அடிக்கடி எல்லை பிரச்சனைகளும் உருவாகின்றன. தற்போது பாகிஸ்தான் உடனான எல்லை பிரச்சனை குறைந்துள்ள நிலையில் சீனா தான் இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது. இருப்பினும் இந்திய ராணுவம் உரிய முறையில் சீனாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை
இந்நிலையில் தான் இந்தியா உடனான சீனா, பாகிஸ்தான் நாடுகளில் எல்லை பிரச்சனை தொடர்பான மோதல் என்பது வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் உளவுத்துறை சார்பில் ஆண்டுதோறும் உலக நாடுகள் சந்திக்க இருக்கும் அச்சுறுத்தல் குறித்து ஆண்டறிக்கை வெளியிடப்படும். இந்த ஆண்டறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில் தான் இந்தியா உடனான சீனா, பாகிஸ்தான் நாடுகளின் மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா-சீனா மோதல்
இந்தியா-சீனா இடையே 2020 ஜூன் மாதம் லடாக்கில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இருநாடுகளுக்கும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 2 நாடுகளுக்கும் இடையே செயல்பாடு என்பது அணுஆயுதம் ஏந்தி மோதலை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தலாம். ஏனென்றால் இந்தியா, சீனா ராணுவ தளபதிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் கூட இன்னும் சமூகமான முடிவு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா -பாகிஸ்தான் மோதல்
மேலும் இந்த அறிக்கையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370வது பிரிவை பிரதமர் மோடி அரசு ரத்து செய்த பிறகு 2019ல் இருந்தே இருநாடுகளின் உறவில் விரிசல் உள்ளது. இருப்பினும் 2021க்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் தரப்பில் இருநாடுகளின் உறவுகளை வலுப்படுத்த முயற்சிக்கின்றன. மேலும் இந்தியாவும், பாகிஸ்தானும் அணுஆயுதங்கள் கொண்ட நாடாக உள்ளன. இருநாடுகளுக்கும் இடையேயும் மோதல் போக்கு ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.

இந்தியாவின் பதிலடி அதிகரிப்பு
ஏனென்றால் பாகிஸ்தானின் வெறுப்பான செயல்களுக்கு இந்தியா பதிலடி கொடுப்பது முந்தைய காலங்களை விட அதிகரித்துள்ளது. அதோடு இந்தியாவுக்கு எதிரான போராளி குழுவினரை பாகிஸ்தான் ஆதரித்து வருவதை வரலாறுகள் காட்டுகின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தளவாட பொருட்கள், நிதி உதவி செய்வதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இத்தகைய கருத்து மோதல்கள் அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் காஷ்மீரில் வன்முறை, அமைதியின்மை, இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

தயார் நிலையில் இந்தியா
இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான நெருக்கடிகள் அதிகரிக்கும். இத கவலைக்குரிய விஷயமாகும். சவால்களை சமாளிக்க கூடிய வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி கடந்த நாட்களை விட தற்போது சிறப்பாக செயல்படும் என்பதால் சீனா, பாகிஸ்தான் வெறுப்பான செயல்களுக்கு இந்தயா உரிய பதிலடி கொடுக்கும்'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications