ஸ்வீடன் குரான் எரிப்பால் பதற்றம்! ஐநாவில் பாகிஸ்தானை ஆதரித்த இந்தியா! நிறைவேறிய தீர்மானம்.. செம
வாஷிங்டன்: ஸ்வீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு எதிராக ஐநாவில் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. இதன்மூலம் குரான் எரிப்புக்கு எதிரான தீர்மானம் ஐநாவின் மனி உரிமைகள் அமைப்பின் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக ஸ்வீடன் உள்ளது. இந்நிலையில் தான் ஸ்வீடனை சேர்ந்த ராஸ்மஸ் பலுடன் என்பவர் இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து கூறிவருகிறார். மேலும் அவர் ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கி தூதரகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினார்.

இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு கடந்த மாதம் ஸ்டாக்ஹோம் மசூதி முன்பு குரான் எரிப்பு போராட்டம் நடந்தது. இத்தகைய போராட்டத்தை அனுமதித்த ஸ்வீடன் அரசுக்கு துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்பட ஏராளமான இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகைய செயல்பாடும் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த நாடுகள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தன.
இந்நிலையில் தான் ஸ்வீடன் குரான் எரிப்பு போராட்டத்துக்கு எதிராக ஐநாவில் உள்ள மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் மற்றும் பாலஸ்தீன நாடுகள் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மதவெறுப்புக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகளை ஒவ்வொரு நாட்டு அரசும் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மதசுதந்திரம், கருத்து சுதந்திரம் நசுக்கப்படும். தற்போது குரான் எரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மேற்கத்திய நாடுகள் மதசுதந்திரத்தை பாதுகாக்க கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. அதோடு இதுபோன்ற செயல்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்மானத்துக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த தீர்மானத்துக்கு இந்தியா, சீனா உள்பட 28 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 12 பேர் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 7 நாடுகளின் பிரதிநிதிகள் விலகி இருந்தன. ஐநா மனித உரிமைகள் பாதுகாப்பு சபையில் அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்ததால் இந்த தீர்மானம் நிறைவேறியது. இதனை தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளின் பிரதிநிதிகள் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுபற்றி பாகிஸ்தான் நாட்டின் தூதர் கலீல் ஹஷ்மி கூறுகையில், ‛‛இந்த தீர்மானம் என்பது சுதந்திரத்தை வலியுறுத்துவதாகும். மாறாக பேச்சுரிமையை கட்டுப்படுத்துவது என்பதை நோக்கமாக கொண்டது அல்ல. மேலும் அனைவருக்கும் சமநிலையை ஏற்படுத்தும் நோக்கத்தை இந்த தீர்மானம் கொண்டுள்ளது. இந்த தீர்மானம் தற்போது நிறைவேறியது மூலம் குரான் உள்பட மதம்சார்ந்த நூல்களை யாரும் இழிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications