யுஎஸ்ஸில் இந்திய பொறியாளரை சுட்ட கொள்ளையர்கள்… லிப்ட் கேட்டு காரில் ஏறி அட்டூழியம்
வாஷிங்டன்:அமெரிக்காவில் வழிப்பறி கொள்ளையர்களால் சுடப்பட்ட இந்திய பொறியாளர், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
தெலுங்கானாவை சேர்ந்த பொறியாளர் சாய்கிருஷ்ணா என்பவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3ம் தேதி, இரவு 11.30 மணியளவில் அவர் பணி முடிந்து தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி முனையில் பொறியாளர் சாய் கிருஷ்ணாவை சிலர் மறித்து கடத்தியுள்ளனர்.

பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி அவரிடம் இருந்த பணம், செல்போன் , கிரெடிட், டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றைப் பறித்துதோடு சாய்கிருஷ்ணாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு கீழே தள்ளிவிட்டு காருடன் தப்பிச் சென்றனர்.
சாலையில் துப்பாக்கி குண்டடி பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சாய் கிருஷ்ணாவை அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்து உடனே காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாய்கிருஷ்ணாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது சாய்கிருஷ்ணா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னரே சாய்கிருஷ்ணாவின் உடல்நிலை குறித்து கூறமுடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications