அடேங்கப்பா.. அசத்தல்.. உலக வங்கி தலைவராக தேர்வான இந்திய வம்சாவளி! யார் இந்த அஜய் பங்கா? முழு பின்னணி
வாஷிங்டன்: World Bank என அழைக்கப்படும் உலக வங்கியின் புதிய தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் ஜூன் 2ம் தேதியில் இருந்து அந்த பொறுப்பில் செயல்பட உள்ள நிலையில் அஜய் பங்கா யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக எப்போதும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் தான் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது சர்வதேசய நாணய நிதியத்தின் தலைவராக தொன்றுதொட்டு ஐரோப்பியாவை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவது போல் உலக வங்கியின் தலைவர் நியமனத்தில் இப்படி ஒரு நடைமுறை உள்ளது.
இந்த உலக வங்கியின் தலைவராக தற்போது டேவிட் மல்பாஸ் உள்ளார். உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இதன் நோக்கம் என்பது வளரும் நாடுகளில் நிலவும் வறுமையை குறைப்பதாகும். அதோடு வெளி முதலீடு, பன்னாட்டு வணிகங்களை உருவாக்கி கொடுப்பதிலும் உலக வங்கியின் முக்கிய பங்காற்றி வருகிறது.

ஜோபைடன் பரிந்துரை: இந்நிலையில் தான் டேவிட் மல்பாஸ் உலக வங்கியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். அவரது பதவிக்காலம் முடியும் முன்பே அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். வரும் ஜூன் 1ம் தேதியுன் டேவிட் மல்பஸ் தனது பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறார். இதனால் உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரைத்தார்.
ஜோபைடன் நம்பிக்கை: மேலும் அஜய் பங்கா சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் காலநிலை மாற்றம் உள்பட அவசரமான சவால்களை சமாளிக்கும் நபராக இருப்பார் எனவும் ஜோபைடன் தெரிவித்தார். இந்நிலையில் தான் உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு தனக்கு ஆதரவு கோரும்படி பல நாடுகளுக்கு சென்று பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தார்.
நேர்க்காணல்: கடந்த சில வாரங்களில் மட்டும் 96 அரசு பிரதிநிதிகளை அஜய் பங்கா சந்தித்தார். இதற்காக 3 வாரங்களில் 8 நாடுகளுக்கு 63,643 கிலோமீட்டர் தொலைவு பயணித்து ஆதரவு கோரினார். இதையடுத்து அஜய் பங்கா குறித்து பலகட்டமாக ஆலோசனைகள் நடந்தன. நேற்று முன்தினம் 4 மணிநேரம் வரை அஜய் பங்காவிடம் நேர்க்காணல் செய்யப்பட்டது.
தலைவராக அங்கீகரிப்பு: இது உலக வங்கியின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அஜய் பங்காவை உலக வங்கியின் தலைவராக்க 25 உறுப்பினர்கள் கொண்ட குழு அங்கீகரித்துள்ளது. அதாவது உலக வங்கியின் 25 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு அடுத்த 5 ஆண்டுக்கான தலைவராக அவரை அங்கீகரித்துள்ளது.

24 பேர் ஆதரவு: அதாவது 25 உறுப்பினர்களில் ரஷ்யா புறக்கணித்த நிலையில் பிற 24 உறுப்பினர்கள் அஜய் பங்காவுக்கு ஆதரவு ஓட்டளித்துள்ளனர். இதன்மூலம் இந்திய வம்சாவளியான அஜய் பங்கா உலக வங்கி தலைவராக பொறுப்பேற்பது உறுதியாகி உள்ளது. தற்போதைய உலக வங்கி தலைவர் டேவிட் மால்பஸ் ஜூன் 1ம் தேதி வரை பணியில் இருப்பார். இதனால் ஜூன் 2ம் தேதி முதல் உலக வங்கி தலைவராக அஜய் பங்கா செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இவர்: உலக வங்கியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஜய் பங்கா மகாராஷஅடிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். இவருக்கு வயது 63. இவர் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தி்ல உள்ள இந்திய மேலாண் நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவற்றில் பொருளாதார படிப்புகளை முடித்தார். நெஸ்லே, பெப்சிகோ நிறுவனங்களில் பணியாற்றினார். மேலும் பல நிறுவனங்களில் ஆலோசகராக செயல்பட்டார். அதன்பிறகு 2007 ல் அமெரிக்க குடியுரிமையை பெற்ற இவர் கடந்த 2015ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை குழுவில் அங்கம் வகித்த நிலையில் தற்போது உலக வங்கி தலைவர் பதவியை எட்டிப்படித்துள்ளார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications