அமெரிக்காவில் அடுத்தடுத்து ஷாக்.. மேலும் ஒரு இந்திய மாணவர் பலி.. இந்த ஆண்டில் 4 வது சம்பவம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திய மாணவரின் உயிரிழப்பு குறித்து அங்குள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதேபோன்று நடக்கும் 4 வது சம்பவம் இதுவாகும்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலரும் படித்து வருகிறார்கள். அங்குள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்தும் வருகிறார்கள். வளர்ந்த நாடான அமெரிக்காவில் நல்ல சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகள் கிடைப்பதால் அங்கேயே செட்டிலாகிவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.. இருந்தாலும் சமீப காலமாக அங்கே சில துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து வருகிறன்றன. 2024-ம் ஆண்டு தொடங்கி ஒரு மாதமே முடிந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் இந்திய மாணவர்கள் பலரின் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் பலி: அதாவது அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வந்த ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் என்பவர் மர்மான முறையில் மரனம் அடைந்து இருந்தார். எனினும் விசாரணைக்கு பிறகு இந்திய மாணவர் மரணத்தில் சந்தேகப்படும் படியான நிகழ்வு எதுவும் இல்லை என்று போலீசார் கூறியிருந்தனர். அதனைத் தொடர்ந்து இண்டியானா மாகாணத்தில், நீல் ஆச்சாரியா என்ற மாணவர் காணாமல் போன நிலையில், உயிரிழந்ததாக கூறப்பட்டது.
அதேபோல், கடந்த மாதம் 16 ஆம் தேதி ஜார்ஜியா மாகாணத்தில் எம்பிஏ படித்து வந்த இந்திய மாணவர் விவேக் சைனி பார்ட் டைமாக அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். சூப்பர் மார்க்கெட்டில் போதைக்கு அடிமையான நபர் ஒருவாரால் விவேக் சைனி அடித்து கொல்லப்பட்டு இருந்தார். இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து அமெரிக்காவில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
4 பேர் உயிரிழப்பு: இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய மாணவர் சையது மசாஹிர் அலி, சாலை ஒன்றின் ஓரத்தில் நடந்து சென்ற போது அங்குள்ள கொள்ளை கும்பல் துரத்தி சென்று கொடூரமாக தாக்கியது. இந்திய மாணவரிடம் இருந்து செல்போனை பறித்து, அங்கிருந்து தப்பி சென்றனர். கொள்ளை கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த சையத் மசாஹிர் அலி, ரத்த காயங்களுடன் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதற்கிடையே, மேலும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, சமீர் காமத் (வயது 23) என்ற இந்திய மாணவர் வாரன் கவுன்டி பகுதியில் கடந்த திங்கட்கிழமை சடலமாக மீட்கப்படார். இந்த ஆண்டில் மட்டும் இந்திய மாணவர்கள் 4 பேர் அமெரிக்காவில் உயிரிழந்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐதராபாத் மாணவர்: இதற்கிடையே, அமெரிக்காவின் சிகாகோ நகரில், ஐதராபாத்தை சேர்ந்த இந்திய மாணவர் சையது மசாஹிர் அலி கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்பதாவது:- ஐதராபாத்தைச் சேர்ந்த சையத் மசார் அலி என்ற மாணவர் தாக்கப்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
ஒஹியோ மாகாணத்தில் ஷ்ரேயாஸ் ரெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இது நடந்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் நமது இளைஞர்களுக்காக பிரத்யேக உதவி மையத்தை அமைக்க உள்ளோம். பூமியில் எங்கு இருந்தாலும் காங்கிரஸ் அரசு உங்களுக்காக உள்ளது என்பதை நான் தெலுங்கானா குடிமக்களுக்கு உறுதி அளிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம்












Click it and Unblock the Notifications