3-வது முறை.. விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்..! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
வாஷிங்டன்: போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தை சுனிதா வில்லியம்ஸ் இயக்குகிறார். பட்ச் வில்மோருடன் 25 மணி நேரம் பயணித்து சா்வதேச விண்வெளி நிலையத்தை இருவரும் அடைய உள்ளனர்.. இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சா்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் 2-வது நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்லைனர் பெறும்.
அமெரிக்காவில் இருக்கும் முக்கியமான இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை தான் சுனிதா வில்லியம்ஸ்.. இவர் ஏற்கனவே 2 முறை அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். அந்த பயணங்களில் இவர் தன்னுடன் பகவத் கீதையை விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்தார். இதற்கிடையே 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக இப்போது விண்வெளிக்குச் சென்றுள்ளார்.

போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அவர் விண்வெளிக்குச் சென்றுள்ளார். விண்கலத்தில் மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோர் என்பவரும் சென்றுள்ளார். இந்த போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரலில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்கிறது. இந்தத் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே நடக்க இருந்தது.
இருப்பினும், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் ஆண்டுக்கணக்கில் தாமதம் ஆகி தற்போதுதான் நிறைவேறியுள்ளது. ஏற்கெனவே, கடந்த மாதத் தொடக்கத்தில் நடத்தப்படுவதாக இருந்த அந்த விண்கலத்தின் சோதனை ஓட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த திட்டம், கோளாறு சரி செய்யப்பட்டதால் ஸ்டாா்லைனா் விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது..
இதன் மூலம், ஸ்டாா்லைனா் விண்கலத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் குழு என்ற சாதனையை இருவரும் படைத்துள்ளனா். இந்த விண்கலத்தை சுனிதா வில்லியம்ஸ் இயக்குகிறார். பட்ச் வில்மோருடன் 25 மணி நேரம் பயணித்து அவா் சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைவாா்.. இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சா்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் 2-வது நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்லைனர் பெறும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications