கோடிங் நேர்காணல்களில் தேர்ச்சி பெறுவது எப்படி! கூகுள் ஊழியர் பகிர்ந்த சீக்ரெட்! ஆஹா நோட் பண்ணுங்க
வாஷிங்டன்: பொதுவாக நம்மில் பலருக்கும் நேர்காணல் என வந்துவிட்டாலே உதற ஆரம்வித்துவிடும். சும்மா இருக்கும் போது அனைத்துக்கும் டக்கு டக்குனு பதில் சொல்பவர்கள் கூட நேர்காணலில் திணறுவதை நாம் பார்த்திருப்போம். இதற்கிடையே அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் நேர்காணலை எப்படி ஈஸியாக எதிர்கொள்வது என்பது குறித்த டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார். அது இப்போது டிரெண்டாகி வருகிறது.
இந்தியர்கள் பலரும் பல உயர் பதவிகளில் அமெரிக்காவில் வேலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக ஐடி துறையில் இந்தியர்கள் பலரும் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். இதற்கிடையே கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் மென்பொருள் பொறியாளரான சாஹில் காபா என்பவர் நேர்காணலில் கோடிங் தேர்வில் எளிதாகத் தேர்ச்சி பெறுவது எப்படி என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.

கூகுள் ஊழியர்
இந்திய அமெரிக்கரான சாஹில் காபா, சியாட்டிலில் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கோடிங் தொடர்பான அவரது இந்த LinkedIn போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. நான்கு ஆண்டுகளாகக் கூகிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காபா, நேர்காணல்களில் தான் கோடிங் தேர்வை எப்படி எதிர்கொள்வார் என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார். கோடிங் நேர்காணலில் புத்தகம், பயிற்சி ஆகியவற்றை விட கேள்வி நேர்காணல் எடுப்பவரே முக்கியம் என்றும் அவரை ஹேண்டில் செய்வது முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
இதுதான் சீக்ரெட்
அவர் மேலும் தனது போஸ்டில், "கோடிங் தேர்வை நேர்காணல் செய்பவரை வைத்தே எளிதாகத் தேர்ச்சி பெற முடியும். பெரும்பாலான நபர்கள் நேர்காணல் செய்பவர்களை ஏதோ நீதிபதிகளைப் போலப் பார்ப்பார்கள்.. ஆனால் உண்மையில் என்ன தெரியுமா.. உங்கள் கேள்விக்கு விடையைக் கண்டுபிடிக்க எப்போதும் அவர்கள் தான் மிக சிறந்த சோர்ஸ்.
நேர்காணல் செய்பவர்கள் பேசும் போது மதிப்புமிக்க, நுட்பமான குறிப்புகளை வழங்குவார்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் அனைத்து கேள்விகளையும் கேளுங்கள். ஆரம்பத்திலேயே அனைத்து தெளிவுபடுத்தும் கேள்விகளையும் கேளுங்கள். அதில் பதிலளிக்கும்போது அவர்கள் விடைக்கான குறிப்புகள் இருக்கும். நீங்கள் கேட்கும் கேள்விகள் அப்படி இருக்க வேண்டும்.
அமேசான் நேர்காணல்
நான் ஒருமுறை அமேசான் நேர்காணலுக்குப் போய் இருந்தேன். எனக்கு எங்கு மிகவும் சிக்கலான கேள்வியைக் கொடுத்தார்கள். ஆனால், நான் அதைப் பார்த்துப் பயப்படவில்லை.. மாறாக இரண்டு சாத்தியமான தீர்வுகளைக் குறிப்பிட்டேன். நான் சொல்லும் போது நேர்காணல் செய்வர் என்ன மாதிரி ரியாக்ட் செய்தார் என்பதைத் துல்லியமாகக் கவனித்தேன். இதன் மூலம் எது சரியான பதில் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.
எல்லாரும் மனிதர்கள் தான்
உங்களைச் செய்பவர்களும் மனிதர்கள் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தொழில்நுட்ப திறன்களை மதிப்பிடுவது மட்டுமின்றி, ஜாலியான உரையாடல்களையும் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பாலான நேரத்தில் நாம் பதற்றப்பட்டு ஜாலியாக பேச மாட்டோம். எப்போதும் நேர்காணலில் ஜாலியாக பேசுங்கள்.. இயல்பாக இருங்கள். ஒரு நேர்காணலில் நீங்கள் எழுதும் பெஸ்ட் கோடிங் என்பது நீங்கள் தயாரித்தது அல்ல.. மாறாக நேர்காணல் செய்பவருடன் சேர்ந்து நீங்கள் தயாரிக்கும் கோடிங் தான் சிறந்ததாக இருக்கும்" என்று பதிவிட்டு இருந்தார்.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. ஒரு கட்டத்தில் கூகுள் நிறுவனமே உங்கள் டிப்ஸுக்கு நன்றி சாஹில் எனப் பதிலளித்தது. கூகுள் மட்டுமின்றி நெட்டிசன்கள் பலரும் அவரது கருத்தை ஆமோதித்து கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். நீங்க என்ன நினைக்கறீங்கனு கமென்டில் சொல்லுங்கள்!
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications