பாலக் பனீர் சூடாக்கியது குற்றமா? அமெரிக்க கல்லூரியில் இந்தியர்களுக்கு நேர்ந்த கதி.. படிப்பும் போச்சு
வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ பௌல்டர் பல்கலைக்கழகத்தில் சாதாரண பாலக் பனீர் உணவைச் சூடாக்கியதால் இந்திய மாணவர்கள் இருவரின் எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பல்கலைக்கழகம் அழுத்தம் கொடுத்த நிலையில், இருவரும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் விளைவாக அவர்களுக்கு $200,000 (சுமார் 1.6 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் இருவரும் தங்கள் முனைவர் படிப்பை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இப்போது கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். பல பகுதிகளில் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இருந்த போதிலும் இந்தியர்கள் தொடர்ச்சியாகப் பாகுபாடுகளையும் சந்தித்து வருகிறார்கள். அப்படித் தான் இந்திய உணவைச் சூடுபடுத்திய ஒரே காரணத்திற்கு இரு இந்திய மாணவர்கள் பெரிய சிக்கலை எதிர்கொண்டனர்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள்
பீகாரை சேர்ந்த ஆதித்யா பிரகாஷ் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த ஊர்மி பட்டாச்சார்யா ஆகியோருக்கு தான் இந்தப் பாகுபாடு நடந்துள்ளது. இந்த விவகாரம் 2023 செப்டம்பர் 5ம் தேதி ஆரம்பித்துள்ளது. அப்போது மானுடவியல் துறையில் முனைவர் பட்டம் படித்து வந்த பிரகாஷ், அங்கு இருந்த பொது மைக்ரோவேவில் தனது பாலக் பனீர் உணவைச் சூடுபடுத்தியுள்ளார்.
பிரச்சனை
அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் சம்பந்தமே இல்லாமல் வந்து.. பாலக் பனீரில் இருந்து ஹெவி வாசனை வருவதாகவும் மைக்ரோவேவைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லியுள்ளார். உணவைச் சூடுபடுத்தக் கூடாது என்ற எந்தவொரு விதியும் இல்லாத போதிலும், இவர் இதுபோல கேட்டுள்ளார். இதனால் அதை ஏற்க மறுத்த பிரகாஷ், "இது வெறும் உணவு. நான் சூடு செய்துவிட்டு உடனே சென்றுவிடுவேன். அதில் என்ன பிரச்சனை" என்று கேட்டுள்ளார். இங்கு தான் எல்லாப் பிரச்சினையும் ஆரம்பித்துள்ளது.
அதன் பிறகு தன்னை குறிவைத்து துறையில் உள்ள பிற அதிகாரிகள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பிரகாஷ் குற்றம்சாட்டினார். சும்மா அடிக்கடி மீட்டிங் எனச் சொல்லி மூத்த பேராசிரியர்கள் கூப்பிட்டு வார்ன் செய்துள்ளனர்.. மேலும், ஊழியர்களை அச்சுறுத்தியதாகவும் பிரகாஷ் மீது ஆதாரமே இல்லாமல் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் அவருக்குக் கிடைத்து வந்த நிதியுதவியும் நின்றுபோனது.
ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டு
ஊர்மி பட்டாச்சார்யா என்ற மற்றொரு மாணவிக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டது. அதாவது பிரகாஷின் பாலக் பனீர் சம்பவத்திற்குப் பிறகு ஊர்மிளாவும் சில மாணவர்களும் இந்திய உணவைச் சாப்பிட எடுத்து வந்துள்ளனர். ஆனால், அதையே பெரிதுபடுத்தி, வேண்டும் என்றே கலவரத்தை உண்டாக ஊர்மிளா முயன்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் இதனால் கடுமையாக ஊர்மிளா பாதிக்கப்பட்டார். அங்குள்ள ஊழியர்கள் இவருக்கும் பிரஷர் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
பழிவாங்கல்
இந்த அணுகுமுறை தங்களுக்கு மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்தியதாக மாணவர்கள் தெரிவித்தனர். பொதுவாக அமெரிக்காவில் முனைவர் பட்டத்திற்குப் படிக்கும் மாணவர்களுக்கு முதுகலைப் பட்டம் வழங்கப்படும். ஆனால், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முதுகலைப் பட்டத்தை வழங்கவும் பல்கலைக்கழகம் மறுத்துவிட்டதாம். அதன் பிறகே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாக பிரகாஷ் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாகவே இருவரும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
இழப்பீடு வழங்க உத்தரவு
மே 2025ல் மாணவர்கள் தங்கள் சிவில் உரிமை வழக்கைத் தொடுத்தனர். அந்த வழக்கில் தான் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பாகுபாடு, மன உளைச்சலை ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால் இரண்டு இந்திய மாணவர்களுக்கும் அந்த பல்கலைக்கழகம் $200,000 (சுமார் 1.6 கோடி ரூபாய்) இழப்பீடாக தரும். மேலும், அவர்களுக்கு முதுகலைப் பட்டத்தை வழங்கவும் அந்தப் பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது. அதேநேரம் அவர்கள் இருவரும் அதே பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கோ அல்லது பணிபுரிவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இந்தியாவுக்கும் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
டிரம்ப் வந்த பிறகு நிலைமை மோசமாகிவிட்டதால்.. தங்கள் மீதான நடவடிக்கை மேலும் மோசமாக இருக்கும் என அஞ்சுவதால் மீண்டும் அமெரிக்கா செல்லும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தனர். இழப்பீட்டை விட உணவின் அடிப்படையில் பாகுபாடு காட்டினால் விளைவுகள் இருக்கும் என்பதைக் காட்டும் வகையிலேயே தங்கள் வழக்கு இருக்கும் என்ற பிரகாஷ் தெரிவித்தார்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications