இந்தியாவின் ஜிசாட்-20 சாட்டிலைட் உடன் விண்ணில் பாய்ந்த.. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!
வாஷிங்டன்: இந்தியாவின் இஸ்ரோ அமைப்பிற்குச் சொந்தமான GSAT-20 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ சாட்டிலைட்கள் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் விண்ணில் செலுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அப்படி அவர் நடத்தி வரும் நிறுவனங்களில் முக்கியமானது ஸ்பேஸ்எக்ஸ்.

ஸ்பேஸ்எக்ஸ்: ஸ்பேஸ்எக்ஸ் மூலம் சாட்டிலைட்கள் ஏவப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நாசா இப்போது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்களையே அதிகம் பயன்படுத்துகிறது. இதற்கிடையே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் இஸ்ரோவின் GSAT-20 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டன.
சுமார் 4,700 கிலோ எடை கொண்ட இந்திய சாட்டிலைட்கள், நமது நாட்டின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டது. இந்த சாட்டிலைட்களின் ஆயுட்காலம் 14 ஆண்டுகள் இருக்கும் எனத் தெரிகிறது.
என்ன காரணம்: பொதுவாக இஸ்ரோவே தனது அனைத்து சாட்டிலைட்களையும் செலுத்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் கூட இஸ்ரோ மூலமாகவே சாட்டிலைட்களை விண்ணுக்கு அனுப்பும். அப்படியிருக்கும் போது இஸ்ரோ ஏன் இந்த GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ்எக்ஸ் மூலம் அனுப்பியது என்ற சந்தேகம் வரலாம்.
இந்த GSAT-N2 செயற்கைக்கோளின் எடையே அதற்குக் காரணமாகும். இந்த GSAT-N2 செயற்கைக்கோளை 4,700 கிலோ எடை கொண்டது.. இது இஸ்ரோவின் எந்தவொரு ராக்கெட்டுகலாலும் சுமந்து செல்ல முடியாத அளவுக்கு கனமானது என்பதாலேயே ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இஸ்ரோ தனது ராக்கெட்களை அனுப்பியுள்ளது.
எலான் மஸ்க் நிறுவனம்: தற்போது இஸ்ரோவின் மிக பெரிய ராக்கெட்டால் என்றால் அது எல்விஎம்-3 தான். இந்த ராக்கெட்டால் அதிகபட்சமாக 4000 கிலோ எடையுள்ள விண்கலத்தை ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்பர் ஆர்பிட் வரை எடுத்துச் செல்ல முடியும். இருப்பினும், இந்த சாட்டிலைட் அதை விட எடை அதிகமானது என்பதாலேயே எலான் மஸ்கின் உதவியை இஸ்ரோ நாடியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டிற்கு வரும் போது அது தொலைதூரப் பகுதிகளுக்கான இணைய இணைப்பு மற்றும் விமானத்தில் உள்ள இணையம் உள்ளிட்ட சேவைகளை வழங்க உதவும்.
முதல்முறை: இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து இதுபோல சாட்டிலைட்களை அனுப்புவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு வரை கனரக செயற்கைக்கோள்களை இந்தியா ஐரோப்பிய நாடுகளில் இருந்தே ஏவி வந்தது. இப்போது பிரான்ஸ் நாட்டின் ஏரியன்ஸ்பேஸில் தேவையான ராக்கெட்டுகள் இல்லை. மேலும், அங்கு ரஷ்யா - சீனா இடையே மோதலும் நிலவி வருவதால் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் சாட்டிலைட்டை விண்ணில் அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications