யுரேனியத்தை தர ஈரான் ஒப்புதல்.. டிரம்ப் வெளியிட்ட மேஜர் தகவல்.. முடிவுக்கு வரும் மேற்காசிய போர்?
வாஷிங்டன்: அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தருவதற்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அணு ஆயுதம் தயாரிக்க முயல்கிறது என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டாக இருந்த நிலையில், தற்போது யுரேனியத்தை வழங்க ஒப்புக்கொண்டு இருப்பதாக டிரம்ப் கூறியிருப்பதால் மேற்காசிய போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் அணு சக்தி தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா கடந்த மாதம் 28 ஆம் தேதி தாக்தலை தொடங்கியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது குண்டு மழை பொழிந்தன. ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி உள்பட முக்கிய தலைவர்கள் ஈரானில் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா ஈரான் போர்
இதனால், வெகுண்டெழுந்த ஈரான், பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ கட்டமைப்புகளையும், எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசநதியையும் மூடுவதாக அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது.
யுரேனியத்தை தர ஈரான் ஒப்புதல்
இதற்கு தற்காலிக நிவாரணமும் கிடைத்தது. அமெரிக்காவும் ஈரானும் 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் செய்தன. பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. விரைவில் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வழங்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக இருந்தது. ஆனால் அணு ஆயும் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை வழங்க ஈரான் மறுத்ததே பேச்சுவார்த்தை தோல்விக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் கூறியது என்ன?
அதாவது, ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை தர ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அமைதி ஒப்பதம் விரைவில் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது:- அணு குப்பைகளை எங்களிடம் தர அவர்கள் (ஈரான்) ஒப்புக்கொண்டுள்ளது.
நாங்கள் ஒப்பந்தத்தை மெற்கொள்ள இருக்கிறோம். அதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒப்பந்தம் ஏற்பட்டால், எண்ணெய் விநியோகம் சீராகும். ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அமைதி ஒப்பந்தம் பாகிஸ்தானில் கையெழுத்தாகும் பட்சத்தில் நான் அந்த நாட்டிற்கு செல்லக்கூடும்" என்றார்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications