ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க மாட்டோம்! நேரடி வார்னிங் கொடுத்த டிரம்ப்
வாஷிங்டன்: யுரேனியம் செறிவூட்டல் விஷயத்தில் அமெரிக்காவுடன், ஈரான் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் நேரடியாக வார்னிங் கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே ஈரானை சுற்றி அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த போர் கப்பல்களான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் யுஎஸ்எஸ் ஜெரால்டு போர்டு ஆகிய கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கப்பலுக்கு சப்போர்ட்டாக மேலும் சில தாக்குதல் கப்பல்களும் உள்ளன. இப்படி இருக்கையில் ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருப்பது நிலைமையை மேலும் பதற்றமாக்கியுள்ளது.

டிரம்பின் பேச்சு ஏன் முக்கியம்?
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் ஆண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற வேண்டும். இது நாட்டின் தற்போதைய நிலை, அரசின் சாதனைகள் மற்றும் வருங்காலத் திட்டங்களை விளக்கும் ஒரு அறிக்கை போன்றது. அந்த வகையில் இன்று அவர் உரையாற்றியிருந்தார்.
வரி குறித்து பேசிய டிரம்ப்
தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் ஈட்டிய வெற்றிகளைப் பட்டியலிட்ட டிரம்ப், அமெரிக்கா ஒரு புதிய பொற்காலத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். அதேபோல சமீபத்தில் டிரம்ப் விதித்த வரியை அந்நாட்டு உச்சநீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது. இதன் காரணமாக டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இருப்பினும் மற்றொரு சட்டத்தை பயன்படுத்தி மொத்த நாடுகளுக்கும் 15% வரியை டிரம்ப் விதித்திருக்கிறார்.
வரி நீடிக்கப்படுமா?
இந்த விஷயம் குறித்து பேசிய அவர், வரி விஷயத்தில் தான் உறுதியாக இருப்பதாக கூறியிருக்கிறார். தற்போது டிரம்ப் போட்டிருக்கும் வரி 150 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். அதன் பின்னரும் நீட்டிக்க வேண்டும் எனில், அமெரிக்க நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே இன்று நாடாளுமன்றத்தில் டிரம்ப் தனது வரி குறித்து பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
வேறு என்ன பேசினார்?
அதேபோல எல்லை பாதுகாப்பு குறித்து பேசிய டிரம்ப், வழக்கம்போல சட்டவிரோத குடியேறியவர்களை ஏலியன்கள் என்று விமர்சித்திருக்கிறார். கடந்த 9 மாதங்களாக எந்த ஏலியன்களும் நம் நாட்டிற்குள் நுழையவில்லை என்றும், வழக்கம் போல அனுமதி பெற்று அமெரிக்காவை நேசிக்கும் மக்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்றும் பேசியிருந்தார்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications