வரலாறு காணாத தாக்குதல்.. ஈரான் வலுவிழந்ததா? அமெரிக்க உளவுத்துறை கொடுத்த நெகட்டிவ் ரிப்போர்ட்
வாஷிங்டன்: ஈரான் மீது, இஸ்ரேலுடன் சேர்ந்துக்கொண்டு தொடர் தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இத்தனை நாள் நடத்திய தாக்குதலில் ஈரான் எந்த அளவுக்கு வலுவிழந்திருக்கிறது? என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை டிரம்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அறிக்கையில், ஈரான் இன்னும் பலமாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை அமெரிக்க ராணுவத்திற்கு.. குறிப்பாக டிரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன சொல்கிறது உளவு அறிக்கை?
கடந்த 2 வாரங்களாக, ஈரான் மீது சரமாரியாக குண்டு மழை பொழிந்த போதிலும், ஈரானில் அரசு உறுதியாகவே இருக்கிறது. அந்நாட்டு அரசு கவிழும் நிலையில் இல்லை. இந்த குண்டு மழையில் பிப். 28ம் தேதி ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டார். இருப்பினும், அங்குள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் அரசை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக
- ஈரான் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை
- மக்கள் இன்னும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர்
- முக்கிய ராணுவ அமைப்பான IRGC இன்னும் சிதறாமல் உறுதியாக இருக்கிறது
போர் முடியுமா?
மறுபுறம் டிரம்ப் மீதான அழுத்தம் அதிகரித்திருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. அதாவது டிரம்ப் இந்த போரை தொடங்கியதன் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்வை தூண்டி விட்டிருக்கிறார். போர் முடியும்போதுதான் விலை குறையும். எனவே போரை உடனே நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதனால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இருப்பினும் டிரம்ப் நினைத்தாலும் இந்த போர் அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது. காரணம், ஈரான் ஆட்சியாளர்கள், போர் தொடர்வதன் மூலம் டிரம்புக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த நினைக்கின்றனர்.
நம்பாத அமெரிக்கா
அதேபோல அமெரிக்காவுக்கு ஆதரவாக, குர்தீஷ் படைகள் ஆயுதங்களை டிரம்பிடம் கேட்டிருந்தன. ஆனால், டிரம்ப் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தாலும் அது தோல்வியில்தான் போய் முடியும். காரணம் குர்தீஷ் படைகளிடம் போதிய ஆள் பலம் இல்லை. போதாத குறைக்கு ஈரானை முழுமையாக வீழ்த்தாமல் போரை கைவிட தயாராக இல்லை என்று இஸ்ரேலும் அடம்பிடித்து வருகிறது.
இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தியது போதும், இனி தரைவழி தாக்குதலை தொடரலாம் என இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், அதிலும் வெற்றி சாத்தியமில்லை என்பதே உளவுத்துறையின் தகவலாக இருக்கிறது.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஈரான் கதை முடிந்தது? 'Mark 84 பாம்'.. டிரம்ப் வெளியிட்ட போட்டோவால் ஈரான் மக்கள் அலறல்! -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
கட்டம்கட்டப்பட்ட ஈரான்.. இஸ்ரேல் கைக்கு வந்த 1800 Mark 84 குண்டு.. டிரம்ப் பதிவின் மெகா பின்னணி! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications