"கடவுளின் எதிரிகள்.. நிச்சயம் பழிவாங்கப்படுவார்கள்.." டிரம்பிற்கு எதிராக ஃபத்வா வெளியிட்ட ஈரான்
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களாகவே நீடித்தது. அமெரிக்கா தலையிட்டுத் தாக்குதல் நடத்திய பிறகே இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் மத்தியக் கிழக்கில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. இதற்கிடையே ஈரானின் மூத்த குருமாரான அயதுல்லா ஷிராஸி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தலைவர்களுக்கு எதிராக ஃபத்வா கொடுத்துள்ளார்.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோதல் வெடித்திருந்தது. முதலில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. அதைத் தொடர்ந்து ஈரானும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. இரு நாடுகளும் இதுபோல மாறி மாறி தாக்கிக் கொண்டன. இறுதியில் அமெரிக்கா உள்ளே வந்து ஈரானின் அணு உலைகள் மீது பங்கர் பஸ்டர் பாம்களை வீசின.

மத்தியக் கிழக்கு
அதன் பிறகே மோதல் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் ஈரான் நாடுகள் தாக்குதலைத் தொடர மாட்டோம் என அறிவித்தன. இதன் மூலம் 12 நாள் மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம் அந்தப் பிராந்தியத்தில் முழுமையாக அமைதி திரும்பிவிட்டதாக நாம் கருத முடியாது. இதற்கிடையே ஈரானின் மூத்த குருமாரான ஈரானின் கிராண்ட் அயதுல்லா மகரேம் ஷிராஸி சில முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஃபத்வா
ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட மற்றும் பிற மூத்த ஷியா மதகுருமார்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களைக் கண்டித்துள்ள அவர், இதற்காக ஃபத்வாவும் வழங்கியிருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை "எதிரிகள்" என்று அறிவித்து, அவர்களின் நடவடிக்கைகளைக் கண்டித்து அரபு மொழியில் ஒரு ஃபத்வாவை அயதுல்லா நாசர் மகரேம் ஷிராஸி வெளியிட்டு இருப்பதாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது..
பெரிய பாவம்
இது குறித்து ஷிராஸி கூறுகையில், "இஸ்லாமிய அமைப்பின் தூணாக இருக்கும் எந்தவொரு நபரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவது குறிப்பாக உயர்மட்டத் தலைவருக்கு எதிராகக் கருத்து சொல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அவர்களைப் பாதுகாப்பதும், அத்தகைய அச்சுறுத்தல்களைச் செய்பவர்களை எதிர்கொள்வதும் நமது கடமையாகும். மேலும் இதைச் செய்வோர் மிகப் பெரிய பாவத்தைச் செய்கிறார்கள்.
மேலும், இஸ்லாமியக் குடியரசின் தலைமையை அச்சுறுத்தியதற்காக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தலைவர்களை ஒன்று திரண்டு வீழ்த்த வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த எதிரிகளுக்கு முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமிய நாடுகள் வழங்கும் எந்தவொரு ஆதரவும் "ஹராம்" அல்லது தடை செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்று அந்த ஃபத்வாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழிவாங்கப்படுவார்கள்
அதில் மேலும், "உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இத்தகைய எதிரிகளுக்கும் அவர்களின் குற்றங்களுக்கும் எதிராக உறுதியாக நிற்க வேண்டும். எதிரிகளுக்கு அவர்கள் உதவினார் அவர்கள் கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள், மேலும் அவர்கள் நிச்சயமாகப் பழிவாங்கப்படுவார்கள்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்களை வெளிப்படையான குற்றங்கள் என்று ஷிராஸி முஹாரிப் குறிப்பிட்டு இருக்கிறார். இதுபோல செய்வோர் கடவுளுக்கு எதிராகப் போர் செய்வதாகவே கருதப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் இவை கடுமையான குற்றமாகக் கருதப்படும்.. இதற்கு இது மரண தண்டனை கூட விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
டிரம்பின் கோல்டு காயின் பிசினஸ்.. அமெரிக்க அதிபர் சட்டத்தை மீறுகிறாரா? என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள் -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி












Click it and Unblock the Notifications