ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு!
வாஷிங்டன்: ஈரான் மீது அடுத்த 5 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், அந்த நாட்டின் மின் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது அடுத்த 5 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனால் பழிக்கு பழி வாங்குவோம் என்ன்று கூறி ஈரான், வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதுபோக ஹார்முஸ் ஜலசந்தியை யும் ஈரான் மூடியது. வளைகுடா நாடுகள் மீதும் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக வளைகுடாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஹர்மூஸ் ஜலசந்தியை மூடியதால் அந்த வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியது. இதனால், எண்ணெய் விலையும் அதிகரித்தது. சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்த நிலையில், ஈரான் 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் இல்லாவிட்டால் அந்த நாட்டின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக ஈரான் மீது அடுத்த 5 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், அந்த நாட்டின் மின் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது அடுத்த 5 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications