40 நிமிடம் வரிசையில் நின்ற அதிபர்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளித்தார் ஜோ பைடன்! கமலா வெல்வாரா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோ பைடன் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து முன்கூட்டியே ஓட்டளித்தார். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் ஆர்வம் காட்டினார். ஆனால் உடல்நல பிரச்சனையால் கடந்த ஜூலை மாதம் போட்டியில் இருந்து விலகினார்.அவரது கட்சியை சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் நிலையில் ஜோ பைடன் ஓட்டளித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒருமுறை அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது நடந்து வருகிறது. கடந்த முறை ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் களமிறங்கி உள்ளார். இவர்கள் 2 பேரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு கருத்து கணிப்புகளில் முதலில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்தார். தற்போது டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.

இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெல்வார்கள்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல் நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றுள்ளது. மேலும் அமெரிக்காவை பொறுத்தவரை தேர்தல் தேதிக்கு முன்பே முன்கூட்டி வாக்களிக்கும் நடைமுறை என்பது உள்ளது. இந்த ஓட்டளிக்கும் நடைமுறை கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
முன்கூட்டியே தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறையை பயன்படுத்தி அதிபர் ஜோ பைடன் வாக்களித்தார். ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேரின் வில்மிங்டன் பகுதியில் ஓட்டுச்சாவடியில் ஜோ பைடன் வரிசையில் நின்று வாக்களித்தார். சுமார் 40 நிமிடங்கள் வரை நீண்ட வரிசையில் ஜோ பைடன் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

இந்த வேளையில் ஜோ பைடன் வரிசையில் நின்றவர்களுடன் சகஜமாக உரையாடினார். மேலும் வீல்சேரில் ஓட்டளிக்க வந்தவருக்கு உதவி செய்தார். தேர்தலில் ஓட்டளித்த பிறகு தனது கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட முடிவு செய்தார்.
ஆனால் அவருக்கு வயது 83 ஆகிறது. அதோடு உடல்நல பிரச்சனைகளை அவர் எதிர்கொண்டார். இதனால் ஜோ பைடன் விலக வேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயக கட்சிக்குள்ளேயே இருந்தது. இதையடுத்து வேறு வழியின்றி ஜோ பைடன் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். அதன்பிறகே அவரது கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications