பெட்ரூம் சுவரில்.. "கடவுளின் அருளால்.. வெள்ளை மாளிகையை நோக்கி".. ஜெ பிடன் செம உற்சாகம்
கடவுளின் அருளால் வெள்ளை மாளிகையை நோக்கி.. என்று ஜோபிடன் தெரிவித்துள்ளார்
ஸ்கிராண்டன், அமெரிக்கா: "கடவுளின் அருளால் வெள்ளை மாளிகையை நோக்கி நான் செல்கிறேன்" என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடர்ந்து பிடன்தான் முன்னணியில் இருந்து வருகிறார். அவருக்கு மிக நெருக்கமாக டிரம்ப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார். வெல்லப் போவது யார் என்று தெரியவில்லை. ஆனால் பிடன்தான் வருவார் என்று பலரும் நம்புகிறார்கள்.

பிடனுக்குமே கூட தான்தான் ஜெயிக்கப் போவதாக ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது. அதை இப்போது ஒரு கையெழுத்தின் மூலமாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.. ஸ்கிராண்டன் நகரில்தான் அவர் பிறந்து வளர்ந்தார். அந்த நகரில்தான் தற்போது அவர் இருக்கிறார்.
அங்குள்ள தான் பிறந்த வீட்டுக்கு வந்த பிடன், வீட்டில் உள்ள தான் சிறு வயதில் விளையாடிய ஒரு குட்டிச் சுவரில், கடவுளின் அருளால் வெள்ளை மாளிகையை நோக்கி என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார் பிடன்.
"இந்த வீட்டிலிருந்துதான் நான் வெள்ளை மாளிகைக்குப் போகப் போகிறேன்" என்று எழுதியுள்ளார் பிடன். மேலும் 11.3.2020 என்றும் அவர் தேதி குறிப்பிட்டுள்ளார்.. இப்போது இந்த புகைப்படம் பெரும் வைரலாகி பரவிக் கொண்டிருக்கிறது.

இதேபோலத்தான் அவர் 2008ம் ஆண்டு துணை அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டபோதும், தனது படுக்கை அறை சுவரில் கையெழுத்திட்டிருந்தார்.. இப்போதும் ஒரு கையெழுத்திட்டுள்ளார். ஒரு வேளை இது இவருக்கு சென்டிமென்ட் போல.
ஸ்கிராண்டனுக்கு தனது பேரக் குழந்தைகளுடன் வந்துள்ளார் பிடன்... 77 வயதாகும் பிடன், அதிபர் தேர்தலின் கடைசிக் கட்டமாக தனது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.. இருப்பினும் அவர் சிறு வயதில் விளையாடிய வீட்டின் தற்போதைய உரிமையாளர் வேறு நபர் ஆவார். அவரது பெயர் ஆன்னி கீரன்ஸ். பிடன் வந்தபோது, நான் உங்களை இங்கு வரும்போதெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்று கூறி வாழ்த்தினார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications