வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க புதிய அதிபர் ஜோ பிடன் டிஜிட்டல் குழுவில்... காஷ்மீர் இளம்பெண் ஆயிஷாவுக்கு முக்கிய இடம்..!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க புதிய அதிபர் ஜோ பிடன் டிஜிட்டல் குழுவில் காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட ஆயிஷா என்ற பெண் இடம்பிடித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் அதிபராகவும், இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபர் மற்றும் துணை அதிபராக அவர்கள் இருவரும் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் புதிய அரசாங்கத்தில் பல மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ள ஜோ பிடன், பல்வேறு துறைகளுக்கும் புதிய அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார்.

கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுத்தால் பேரழிவுதான்.. ஜோ பிடன் வார்னிங் கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுத்தால் பேரழிவுதான்.. ஜோ பிடன் வார்னிங்

 ஆயிஷா ஷா

ஆயிஷா ஷா

அந்த வகையில் தனது டிஜிட்டல் குழுவில் காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட ஆயிஷா ஷா என்ற இளம் பெண்ணுக்கு முக்கியப் பொறுப்பு கொடுத்துள்ளார். தற்போது அமெரிக்காவின் லூசியானாவில் வசித்து வரும் ஆயிஷா ஷா, இளம் வயதிலேயே டிஜிட்டல் ஊடக துறையில் சிறந்த நிபுணராக திகழ்கிறார்.

இந்திய வம்சாவளி

இந்திய வம்சாவளி

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனநாயக கட்சிக்காக டிஜிட்டல் பிரச்சாரத்தை கவனித்துக் கொண்டவரும் இந்த ஆயிஷா தான். இதனால் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே நன்கு பரிச்சயம் பெற்றிருந்தார். அதனடிப்படையில் அமெரிக்க அதிபர் டிஜிட்டல் குழுவில் பணியாற்றும் வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு கிடைத்திருக்கிறது.

பிடன் மகிழ்ச்சி

பிடன் மகிழ்ச்சி

இதனிடையே ஆயிஷா நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோ பிடன், வெள்ளை மாளிகையை அமெரிக்க மக்களுடன் இணைக்க ஆயிஷா புதுமையான வழிமுறைகளை கையாளுவார் என்றும் சிறந்த அனுபவம் கொண்ட ஆயிஷாவை தனது டிஜிட்டல் குழுவில் பணியமர்த்துவதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

ஆயிஷா ஷா இதற்கு முன் உலகின் புகழ் பெற்ற நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியிருக்கிறார். ஜான் எஃப் கென்னடி நிறுவனத்தில் உதவி மேலாளராகவும், ஸ்மித்சோனி நிறுவனத்தில் டிஜிட்டல் துறை தலைமை பொறுப்பிலும் இருந்திருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த பலருக்கும் அவர்களின் திறமையறிந்து ஜோ பிடன் உரிய அங்கீகாரம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Kashmir born girl Aysha sha had a prominent place in Joe Biden digital group
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X