வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக் விவகாரம்... சீனா தன்னை மாற்றிக் கொள்ளாது... அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: லடாக் விவகாரத்தில் பேச்சுவார்த்தையும், ஒப்பந்தங்களும் சீனாவை மாற்றும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஐந்து மாதங்களாக எல்லையில் பிரச்சனை நீடித்து வருகிறது. இருதரப்பிலும் சிக்கலை தீர்த்துக் கொள்ள ராஜாங்க மற்றும் ராணுவ ரீதியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை.

Ladakh: China Wont change its mind says US National Security Adviser

இதுகுறித்து உட்டாவில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கூறுகையில், ''இந்தியா எல்லைக்குள் சீனாவின் அத்துமீறல் தெளிவாக தெரிகிறது. ஆக்கிரமிப்பு மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியின் நிலையை மாற்றுவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. இதேபோல், தைவானிலும் சீனா ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ளது. தைவானை மிரட்டும் வகையில், ராணுவ பயிற்சியை நடத்தி வருகிறது.

ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டத்தின் கீழ் பெரிய நிறுவனங்களை ஈடுபடுத்தி, அவற்றுக்கு கடனுதவி அளித்து, சீன இளைஞர்களைக் கொண்டு பணியை பீஜிங் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் உள்கட்டமைப்பை உயர்த்தி வருகிறது. அவர்கள் மேற்கொண்டு வரும் பெரும்பாலான திட்டங்கள் தேவையில்லாதவை.

Ladakh: China Wont change its mind says US National Security Adviser

இந்த திட்டத்திற்கு சீனாவை நம்பி இருக்கும் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் வேறு வழியில்லை. இந்த நாடுகள் சீனாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்திய எல்லையில் சீனா 60,000 வீரர்கள் குவிப்பு.. அமெரிக்க உதவியை கேட்கிறது இந்தியா- மைக் பாம்பியோ இந்திய எல்லையில் சீனா 60,000 வீரர்கள் குவிப்பு.. அமெரிக்க உதவியை கேட்கிறது இந்தியா- மைக் பாம்பியோ

அமெரிக்காவின் வளத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அமைதி மற்றும் வலுவான நிலையின் மூலம் உலக அரங்கில் அமெரிக்கா செல்வாக்கு செலுத்த வேண்டியது உள்ளது. அதைத்தான் டொனால்ட் ட்ரம்ப் அரசு தற்போது செய்துள்ளது. சீனாவுக்கு எதிரான போட்டி அணுகுமுறையை ட்ரம்ப் உருவாக்கியுள்ளார்'' என்றார்.

English summary
Ladakh: China Won't change its mind says US National Security Adviser
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X