யார் முகத்தில் முழிச்சாரோ தெரியல.. ஜூஸ் குடிக்க போன இடத்தில் விழுந்த ரூ.2 கோடி பரிசு.. அம்மாடியோவ்
வாஷிங்டன்: அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என்று தெரியாது என்பார்கள்.. அதை உண்மை என நினைக்கும் வகையில், அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு ரூ.2.5 கோடி பரிசு லாட்டரியில் அடித்து இருக்கிறது. அவருக்கு லாட்டரி விழுந்த கதையை வைத்து இன்னொரு படமே எடுக்கும் அளவுக்கு சுவாரசிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் எனத் தெரியாது. நேரம் சரியாக அமைந்துவிட்டால் தொட்டது எல்லாம் பொன்னாகிவிடும் என பொதுவாக பலரும் பேசிக்கொள்வதை கவனித்து இருப்போம். கிட்டத்தட்ட இப்படித்தான் லாட்டரி வாங்கும் எண்ணம் இல்லாத சமயத்தில் திடீரென நடந்த ஒரு சம்பவத்தால் லாட்டரியை வாங்கிய பெண்ணுக்கு அதிர்ஷ்ட தேவதை திடீரென கருணை காட்டியிருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு:-

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள கெர்னர்ஸ்வில்லே பகுதியை சேர்ந்த பெண் கெல்லி ஸ்பார். இவருக்கு அவ்வப்போது லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. நமக்கும் ஒருநாள் பரிசு அடிக்காதா? பணக்காரர் ஆகிவிட மாட்டோமா என்ற ஆசையில் அவ்வப்போது லாட்டரி வாங்கி வந்து இருக்கிறார். ஆனால் அப்போது எல்லாம் அவருக்கு லாட்டரியில் பெரிசாக பரிசு எதுவும் அடிக்கவில்லை.
இந்த நிலையில், அண்மையில், பினே குரோவ் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது திடீரென ஜூஸ் குடித்துவிட்டு போகலாம் என்று தோன்றியது. இதனால் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அவர் ஜூஸ் குடிக்க நின்ற கடைக்கு அருகில் ஒரு பெட்ரோல் பம்ப் இருந்துள்ளது. அங்கு பல்வேறு வண்ணங்களில் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்த கெல்லி ஸ்பாருக்கு லாட்டரி வாங்கினால் என்ன? என்ற ஆசை ஏற்பட்டது. உடனடியாக 20 டாலர் கொடுத்து லாட்டரியை வாங்கியுள்ளார். இந்த லாட்டரிக்கு 2.5 லட்சம் daakar (இந்திய மதிப்பில் ரூ.2.10 கோடி) பரிசுத்தொகை அடித்துள்ளது. இதை அறிந்ததும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற கெல்லி ஸ்பார், தன் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய தருணம் என்று கூறி சந்தோஷம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக கெல்லி ஸ்பார் கூறுகையில், நான் ஜூஸ் குடிக்க போன போது அங்கு இருந்த பெட்ரோல் நிலையத்தில் புதிய லாட்டரிகள் கிடந்தன. டிக்கெட்டுகள் மடிந்து கிடந்தன. இதைப்பார்த்ததும் அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுதான் என் வாழ்க்கையின் திருப்பு முனை தருணம். உண்மையில் இது எங்களுக்கு நிறைய உதவிகரமாக இருக்கும். எனக்கு மேலும் கதவுகளை திறந்துவிட்டது போல இது அமைந்துள்ளது" என்று மகிழ்ச்சி குறையாமல் பேசினார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, மதிய சாப்பாட்டை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதால் கடைக்கு போன நபருக்கு அங்கு விற்பனையில் இருந்த லாட்டரியை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனடியாக அவர் வாங்கிய லாட்டரிக்கு 25 கோடி ரூபாய் பரிசு அடித்தது.
சமூக வலைத்தளங்களில் இந்த அதிரஷ்டக்கார நபரை பற்றிய செய்திகள் அதிகம் டிரெண்ட் ஆகியிருந்தன. இதல்லாம் ஒருபக்கம் இருக்க.. யாரோ ஒருவருக்கு மட்டும் பரிசுத்தொகை அடிப்பதற்காக பலபேர் நஷ்டம் அடைவதுதான் லாட்டரி என்றும் இதை எல்லாம் வாங்கி பணத்தை இழந்தவர்கள்தான் ஏராளம் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications