தூங்கும் போது உங்கள் மொபைல் "கண்ட்ரோல்" வாட்அஸ் வசம்.. சர்வதேச அளவில் கிளம்பும் சர்ச்சை! பகீர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சர்வதேச அளவில் பிரபலமா உள்ள மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் மீது தனியுரிமை சார்ந்த பகீர் புகார் கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசே நேரடியாகத் தலையிட உள்ளதாக அறிவித்துள்ளது.

உலகெங்கும் அதிக பேர் பயன்படுத்தும் முக்கிய மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. எப்போதும் ஒரு நேரத்தில் பல கோடி பேர் எப்போதும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவார்கள்.

வாட்ஸ்அப் செயலி சமீப காலங்களாகவே பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதற்குப் பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

வாட்ஸ்அப்: கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமான வாட்ஸ்அப் சில காலத்திலேயே ஹிட் அடித்தது. உலகெங்கும் பலரும் தங்கள் நண்பர்கள் உடனும் சரி, அலுவலகத்திற்கும் சரி வாட்ஸ்அப்பை பயன்படுத்தத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதுவரை முதல் ஆண்டிற்கு இலவசம், அதன் பிறகு வாட்ஸ்அப் பயன்படுத்தச் சந்தா என்றே இருந்தது.

Many complaints that WhatsApp is Using Mics Without Consent

இருப்பினும், வாட்ஸ்டஅப் செயலியை பேஸ்புக் வாங்கிய பிறகு சந்தா முறையை நீக்கிவிட்டு முழுவதும் இலவசம் என்று அறிவித்தார்கள். அப்போதே பலரும் இலவசமாக எப்படி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். முதல் சில ஆண்டுகள் அப்படியே இருந்தாலும் கூட, அதன் பின்னர் மெல்ல வாட்ஸ்அப் மூலம் வருமானத்தை ஈட்டத் தொடங்கினர். அதாவது வாட்ஸ்அப் செயலி மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து விளம்பரங்களை அளித்தனர்.

விளம்பரங்கள்: இப்போது அதையெல்லாம் தாண்டி நேரடியாக நிறுவனங்களே விளம்பரங்களை மெசேஞ்களை அனுப்பி வருகிறது. மேலும், வாய்ப்பு கிடைக்கும் அனைத்து இடங்களிலும் வாட்ஸ்அப் மூலம் வருமானத்தை ஈட்ட முயன்று வருகின்றனர். இருப்பினும், சிலர் வாட்ஸ்அப் மீது பல வித குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தே வருகின்றனர்.

அதிலும் தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப்பில் எதாவது மெசேஞ் செய்தால் அதை வைத்து விளம்பரங்கள் வருவதாகப் பலரும் குறிப்பிடுகின்றனர். இது தனியுரிமை மீறல் என்றே பலரும் விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும், வாட்ஸ்டஅப் நிறுவனம் இந்தத் தகவல்களைத் தொடர்ந்து மறுத்தே வருகின்றன. இந்தச் சூழலில் இப்போது வாட்ஸ்அப் மீது மற்றொரு பகீர் புகார் கிளம்பியுள்ளது.

தூங்கும் போது செய்யும் காரியம்: முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில், ட்விட்டர் பொறியாளர் ஒருவர், தான் தூங்கும் போது கூட பேக் கிரவுண்டில் வாட்ஸ்அப் தனது மைக்ரோஃபோனை பின்னணியில் பயன்படுத்தியதாகக் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

ட்விட்டரில் உள்ள இன்ஜினியரிங் பிரிவு இயக்குநர் ஃபோட் டபிரி, இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், "வாட்ஸ்அப் செயலி பேக் கிரவுண்டில் எனது மைக்கை பயன்படுத்துகிறது. நான் காலையில் 6 மணிக்குத் தான் எழுந்தேன். ஆனால் அதற்கு முன்பு இருந்தே அவர்கள் மைக்கை பயன்படுத்துகிறார்கள். இங்கே என்ன நடக்கிறது எனப் புரியவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

அதேபோல இதை உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கும் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "எதையும் நம்ப வேண்டாம்.. அவ்வளவு ஏன் நம்மிடம் இருப்பதைக் கூட நம்ப வேண்டும்" எனக் குழப்பும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

இது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது செயலியைப் பயன்படுத்தாமல் இருக்கும் போது எப்படி மைக்கை பயன்படுத்தலாம் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மத்திய அமைச்சர்: இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டுள்ளது. இந்த விவகாரத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. வாட்ஸ்அப் தனியுரிமை மீறியிருந்தால் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Many complaints that WhatsApp is Using Mics Without Consent

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இது ஏற்றுக்கொள்ள முடியாத தனியுரிமை மீறல். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். புதிய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா தயாராகி வரும் நிலையில், தனியுரிமை மீறல் குறித்து நடவடிக்கை எடுப்போம்," எனப் பதிவிட்டுள்ளார்.

மறுப்பு: இருப்பினும், இந்த குற்றச்சாட்டை வாட்ஸ்அப் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மைக் செட்டிங்கை பொறுத்தவரைப் பயனாளர்கள் கையில் தான் முழு கட்டுப்பாடும் இருக்கிறது என்றும் ஆண்ட்ராய்டில் உள்ள பிழையே இதற்குக் காரணம் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து விசாரணை நடத்தக் கூகுளிடம் கேட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு சில காலமாகவே சர்வதேச எண்களில் இருந்து தொடர்ச்சியாக ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்துள்ளது. இவை இந்தோனேசியா (+62), வியட்நாம் (+84), மலேசியா (+60), கென்யா (+254) மற்றும் எத்தியோப்பியா (+251) நாடுகளில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் நாம் அனுப்பும் மெசேஞ்கள் வேறு யாரும் படிக்காமல் பாதுகாக்க என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதையும் தாண்டு பாதுகாப்பு சார்ந்த புகார்கள் வந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+