Facebook Chat-களை இனி இஷ்டத்துக்கு ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது.. ஆப்பு வைத்த மார்க் சக்கர்பெர்க்
வாஷிங்டன்: பேஸ்புக் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய வசதியை இணையத்தில் பலரும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்,
சர்வதேச அளவில் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று பேஸ்புக், 190 கோடி பயனாளர்கள் கொண்டு சர்வதேச அளவில் மிக முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக பேஸ்புக் உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் மட்டும் பேஸ்புக் நிறுவனத்திற்கு மொத்தம் 35 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.

மெசஞ்சர்
மெசேஜ் செய்வதற்கு மெசஞ்சர் என்ற தனியாகவும் ஒரு செயலியை வைத்துள்ளது. பொதுவாக இதுபோன்ற சாட் செயலிகளில், ஸ்க்ரீன்ஷாட்கள் தான் பலருக்கு முக்கிய பிரச்சினையாக இருக்கும். அதாவது ஒருவர் தனிப்பட்ட முறையில் அனுப்பும் மெசேஜ்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதைப் பலருக்கும் பரப்பிவிடுவார்கள். இது தனியுரிமைக்கு எதிராக உள்ளதாகப் பலரும் சாடிவரும் நிலையில், இதை தடுக்க பேஸ்புக் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆப்பு
அதன்படி தற்போது பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சரில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது இனிமேல் பயனாளர் ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் அது தொடர்பான தகவல்கள் எதிர் பயனாளர், அதாவது மெசேஜ் அனுப்புவோருக்குத் தெரியப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்று பலரும் வரவேற்றுள்ளனர்.

நோட்டிபிகேஷன்
இது தொடர்பாக மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில், "நீங்கள் அனுப்பும் தானாக அழியும் மெசேஞ்களை யாராவது ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், அது குறித்து உங்களுக்கு நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார். இதை வசதியை மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கியும் உள்ளார். தானாக அழியும் டிசப்பியரிங் மெசேஜ் வசதி என்பது பல காலமாக மெசஞ்சரில் உள்ளது. இதன் மூலம் ஒருவர் அனுப்பும் மேசேஜ் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தானாக டெலிட் ஆகிவிடும்.

விழிப்புணர்வு
இருப்பினும், இது தொடர்பாகப் பயனாளர்கள் போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை என்பதால், இத்துடன் பல புதிய வசதிகளைச் சேர்த்து பயனாளர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் பேஸ்புக் இறங்கியுள்ளது. இந்த டிசப்பியரிங் மெசேஞ் வசதியை முதலில் ஸ்னாப்சாட் தளம் தான் கொண்டு வந்தது. இதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற தளங்களில் இந்த வசதி கொண்டு வரப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications