செவ்வாய் கிரகத்தில் கிடக்கும் மர்மமான பொருள்? ஏலியன்கள் கைவரிசையா? நாசா வெளியிட்ட புகைப்படம்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என்பதை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செவ்வாயின் மேற்பரப்பில் வினோதமான ஒரு பொருள் கிடப்பதை நாசாவின் ரோவர் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
சூரிய குடும்பத்தில் உள்ள பூமியை போலவே வேறு கிரகத்திலும் உயிர்கள் வாழ்கின்றனவா? அல்லது வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சூரிய குடும்பத்தில் உள்ள 4-வதாக உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்ற ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் முதன்மை வகிக்கும் நாசாவும் இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் இருக்கும் பிற கோள்களை விட செவ்வாய் கிரகம் தான் மனிதன் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கலாம் என்றும் அதனால் மனித குடியேற்றம் அடுத்து செவ்வாய் கிரகத்தில் தான் அமையும் என்பது விஞ்ஞானிகளின் வாதமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக செவ்வாய் கிரகத்தில் நடைபெறும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மிகவும் கவனம் பெறுகிறது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலங்களை அனுப்பியுள்ளது. நாசாவின் ரோவர் Perseverance இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த ரோவர், செவ்வாயின் மேற்பரப்பில் 28 மைல்கள் (45 கி.மீட்டர்) தூரம் சென்று இந்த பெர்சிவரன்ஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்தின் ஜெஸெரோ (Jezero Crater) பகுதியில் நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் இருக்கிறதா? என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும், செவ்வாய் கிரகத்தின் படங்களையும் அந்த விண்கலம் அனுப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது Perseverance ரோவர் செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதேபோல், ரோவர் சேகரிக்கும் கற்கள் மற்றும் மண் போன்றவற்றை பூமிக்கு கொண்டு வந்து அதை ஆய்வு செய்து எதிர்கால செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு பயன்படுத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாசாவின் மேற்பரப்பில் நடுவில் துளை கொண்ட பெரிய அளவிலான பாறை ஒன்று கிடப்பதை ரோவர் படம் பிடித்துள்ளது. ஜெசரோ கிரேட்டரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கிடக்கும் இந்த பாறையை ரோவரில் உள்ள அதி நவீன கேமரா படம் பிடித்துள்ளது. ரோவர் விண்கலம் எடுத்த இந்த படத்தை SETI வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தென்பட்ட இந்த வினோத பாறையை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கற்பனைகளை பறக்க விட்டனர்.
அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஏலியன்கள் பயன்படுத்திய கழிவறையாக இருக்கலாம் என ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு கதையை அளந்து விட்டுள்ளார். அதேபோல சில நெட்டிசன்கள் சில வகையான முட்டையாக இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளனர். இப்படி நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். எனினும், செவ்வாய் கிரகத்தில் தென்படும் இந்த பாறைகள் விண்கல்லாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications