வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெடியான நாசா.. மீண்டும் நிலவில் மனிதன்! 53 ஆண்டு கழித்து நடக்கும் அதிசயம் - இன்று பாயும் ராக்கெட்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ் சோதனை ஓட்டமாக ஆர்டெமிஸ் 1 ஒன்ற ராக்கெட்டை நாசா இன்று நிலவுக்கு அனுப்புகிறது.

கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போலோ விண்கலம் மூலமாக மனிதர்களை நாசா நிலவுக்கு அனுப்பி சாதித்தது. அதன் பின்னர் நிலவுக்கு மனிதர்கள் செல்லவில்லை. செயற்கைகோள் உதவியுடன் நிலவு குறித்த தகவல்கள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், 53 ஆண்டுகளுக்கு பின்னர் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை வரும் 2025 ஆம் ஆண்டு நாசா செயல்படுத்த உள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பி அங்கேயே தங்க வைத்து நீண்டகால சோதனையை மேற்கொள்ள உள்ளது.

வெள்ளத்திற்கு முன்பும்.. இப்போதும்.. பாகிஸ்தானே மாறிப்போச்சே.. நாசா வெளியிட்ட சாட்டிலைட் படங்கள்வெள்ளத்திற்கு முன்பும்.. இப்போதும்.. பாகிஸ்தானே மாறிப்போச்சே.. நாசா வெளியிட்ட சாட்டிலைட் படங்கள்

முதல் முயற்சி

முதல் முயற்சி

இதற்கான திட்டத்தை நாசா செயல்படுத்த தொடங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் கடந்த திங்கள்கிழமை மாலை 6:03 மணியளவில் இந்த செயற்கைகோளை ஏவ திட்டமிட்டப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு எஞ்சின் செயலிழந்ததால் அந்த முயற்சி தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இன்று ஏவப்படும் ராக்கெட்

இன்று ஏவப்படும் ராக்கெட்

இந்த நிலையில் எஞ்சினில் ஏற்பட்ட பழுது சீர் செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்து இருக்கின்றனர். இதனை அடுத்து இன்று நாசா வெளியிட்ட அறிக்கையில், இன்று அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.17 மணியளவில் ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை ஏவுவதற்கான இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்திய நேரப்படி இந்த ராக்கெட் 11.47 மணியளவில் இந்த ராக்கெட் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. நாசாவின் புதிய விண்வெளி ஏவுதள அமைப்பான எஸ்.எல்.எஸ். ராக்கெட், ஓரியன் விண்கலம் மற்றும் இதர அமைப்புகளை ஒருங்கிணைந்த முதல் ராக்கெட்டாக இது உள்ளது.

மனித பொம்மைகள்

மனித பொம்மைகள்

ஓரியன் விண்கலத்தில் அதிர்வுகளை உணரும் சென்சார்கள் இடம்பெற்றுள்ளன. மனிதர்கள் நிலவுக்கு செல்வதற்கான சூழல் இருப்பதை சோதனைக்காக மனித திசுக்களை பரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற 3 டம்மிகள் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது.

 நிலவிலிருந்து 60 மைல்

நிலவிலிருந்து 60 மைல்

இதன் மூலம் விண்வெளி கதிர்வீச்சுகளை மனித உடல்கள் உணர்வது குறித்து சோதிக்கப்படும். இந்த ஆர்டெர்மிஸ் 1 ராக்கெட் 42 நாட்களில் 1.3 மில்லியன் மைகள் பயணிக்கும். இந்த ராக்கெட்டில் கொண்டு செல்லப்படும் ஓரியன் விண்கலம் நிலவின் மேற்பரப்புக்கு அருகே 60 மைல்கள் தொலைவில் பறக்கவிட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

English summary
Nasa Man to Moon mission - Today launch Ardemis 1 rocket: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ் சோதனை ஓட்டமாக ஆர்டெமிஸ் 1 ஒன்ற ராக்கெட்டை நாசா இன்று நிலாவுக்கு அனுப்புகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X