திடீரென சுருங்கும் சந்திரன்.. அதிரும் ஆய்வாளர்கள்.. இதே நிலை நீடித்தால் நிலா மொத்தமாக மாயமாகுமாம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நமது பூமியைச் சுற்றி வரும் இயற்கை துணைக்கோளாகும். நிலா இருப்பதால் பூமியில் அலைகள் தொடங்கி பருவநிலை வரை பல விஷயங்கள் நிலையாக இருக்கிறது. இதற்கிடையே நிலவின் புவியியலை ஆய்வு செய்தபோது அது மெல்லச் சுருங்கி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்!

நிலா குறித்து சில சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நிலவு, அதன் உட்புறம் மெதுவாகக் குளிர்வடைவதால் சுருங்கி வருவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நிலவின் புவியியலை ஆய்வு செய்தபோது இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இந்த செயல்முறை பல கோடி ஆண்டுகள் நடந்து வந்தாலும் கூட, இப்போது அந்த பிராசஸ் வேகமடைந்துள்ளது புதிய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

Nasa research on Moon

சுருங்கும் நிலவு

அமெரிக்காவின் தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் பூமி மற்றும் கோளியல் ஆய்வுகள் மையத்தின் ஆய்வாளர்களே இது குறித்த ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் நிலவின் உட்புற வெப்பம் படிப்படியாகக் குறைவதாலேயே இது நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. நிலவு அதன் வெப்பத்தைக் காலப்போக்கில் இழக்கும்போது, அதன் உட்புறம் சுருங்குகிறது. இது மேற்பரப்பைச் சுருக்கி, அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

அதேநேரம் நிலவு சுருங்குவதாகச் சொல்லும் முதல் ஆய்வு இது இல்லை. கடந்த 2010ம் ஆண்டிலேயே இதே மையத்தின் மூத்த விஞ்ஞானி எமரிட்டஸ் தாமஸ் ஆர். வாட்டர்ஸ் என்பவர் நிலவு பல கோடி ஆண்டுகளாகச் சுருங்கி வருகிறது என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலவு மறைந்து போனால் என்ன நடக்கும்?

நிலவு சுருங்கி வருவது உண்மை தான் என்றாலும் தற்போதைய சூழலில் அது முழுமையாக மறைந்துவிடாது. அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் அது மறைந்து போகும். அப்படி மறைந்தால் பூமிக்கு என்னவாகும் என்பது குறித்தும் ஆய்வுகளை நடத்தியுள்ளனர். நிலவு மறையும்போது பூமியில் அதனால் பல விளைவுகள் ஏற்படும் என்கிறார்கள்.

நிலவு தான் பூமியின் அச்சு சாய்வினை நிலைப்படுத்துகிறது.. கடல் அலைகளை மிதப்படுத்துகிறது. நீண்டகால காலநிலை வடிவங்களையும் பாதிக்கிறது. நிலவு இல்லாமல் போனால்.. பூமி தீவிர காலநிலை மாற்றங்கள், நிலையற்ற பருவங்களை எதிர்கொள்ளும். கடல் அலைகள் கூட மிக லேசானதாக மாறும். அதாவது இப்போது நாம் பார்க்கும் எதுவுமே இருக்காது.

என்ன நடக்கும்

கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டது. அப்போது பலத்த மழை காரணமாகப் பயிர்கள் நாசமடைந்து, பஞ்சம் நிலவியதோடு, நிலவும் மறைந்து போனது, அதாவது 1110ஆம் ஆண்டில் இது நடந்ததாக மதிப்பிடப்படுகிறது. அந்த சமயத்தில் நிலவு மற்றும் சூரியனைப் பார்க்க முடியவில்லை என்று பீட்டர்பரோ குரோனிக்கல் என்ற ஆங்கிலோ-சாக்ஸன் எழுதியுள்ளார். எரிமலை வெடிப்பிலிருந்து புறப்பட்ட சல்பர் நிறைந்த துகள்களின் 'திரை' காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் பின்னர் விளக்கினர்.

நிலவு எப்படிச் சுருங்குகிறது?

நிலவு குளிர்வடையும்போது, அதன் மேற்பரப்பில் லோபேட் ஸ்கார்ப்ஸ் எனப்படும் புவியியல் அம்சங்கள் உருவாகின்றன. மேலோடு சுருங்கி மேல்நோக்கித் தள்ளப்படும்போது உருவாகும் இவை, சிறிய செங்குத்தான முகடுகளைப் போன்ற அமைப்புகளாகும். விஞ்ஞானிகள் நிலவின் மேற்பரப்பில் சிறிய மாரே முகடுகளையும் (SMRs) கண்டறிந்துள்ளனர். இது நிலவு இன்னும் நுட்பமான புவியியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது என்பதை உணர்த்துகிறது. அதுவே நிலவு சுருங்க காரணமாக அமைகிறது.

இந்த அமைப்புகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் எதிர்காலத்தில் நிலவு குறித்த ஆய்வுக்காக அங்குச் செல்லும்போது எந்த இடத்தில் தரையிறங்கலாம் என்பதைத் தேர்வு செய்ய இது உதவியாக இருக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+