Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெஞ்சாத குறையாக கேட்ட டிரம்ப்.. மதிக்காத ஐரோப்பிய நாடுகள்.. ஈரான் போரில் தலையிட மறுப்பது ஏன்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் அமெரிக்கா ஆரம்பித்த போர் இப்போது அவர்கள் கட்டுப்பாட்டை விட்டுச் செல்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் ஐரோப்பிய நாடுகளிடம் டிரம்ப் உதவி கோரியிருக்கிறார். இருப்பினும், இதில் தலையிட ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டாமல் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் அமைதிக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்தது நாம் பார்க்கலாம்!

டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்த போர் மெல்ல ஈரானின் கட்டுப்பாட்டில் செல்கிறது. ஈரான் எந்தவொரு சலனமும் இல்லாமல் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைக் குறிவைத்துள்ளது. இது அவர்களுக்கு பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது. இதனால் டிரம்ப் தனது நேட்டோ கூட்டாளிகளிடம் உதவி கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

NATO Rejects Trump Europe Refuses to Join hand with US and Israel despite middle east tension

ஆர்வம் காட்டவில்லை

ஆனால், இஸ்ரேலுடன் இணைந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் ஆரம்பித்த இந்த போரில் டிரம்புக்கு உதவ ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டவில்லை.. அமெரிக்காவுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளிக்காதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் வெளிப்படையாகவே விமர்சித்தார். குறிப்பாக, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரை அவர் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டினார்.

ஏனென்றால் அதற்கு முன்பு தான் ஈரான் உடனான இந்த போரில் பிரிட்டன் ஈடுபடாது என்பதை ஸ்டார்மர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அமெரிக்காவின் நெருங்கிய பார்டனர்களில் ஒன்றான பிரிட்டன், ஒரு ராணுவ மோதலில் அமெரிக்கா பக்கம் நிற்காமல் இருப்பது அரிதான நிகழ்வு. அதேபோல டிரம்பின் அழைப்புக்கு ஜெர்மனியில் இருந்தும் மிகத் தெளிவான மறுப்பு வந்தது. இந்த போருக்கும் நேட்டோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் குறிப்பிட்டார். மேலும், "இது எங்கள் போரல்ல. இதை நாங்கள் தொடங்கவில்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஒரு உறுப்பினர் நாடு தானாகப் போரை ஆரம்பித்துவிட்டு, மற்ற எல்லோரையும் அதைத் தொடரும்படி கட்டாயப்படுத்துவது சரியான போக்கு இல்லை என்றும் நேட்டோ அதற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்றும் பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்புத் துறைத் தலைவர் ஜெனரல் நிக் கார்ட்டர் கூறினார்..

ஆதரவு இல்லை

இந்த போரில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்.. வெளிநாடுகளில் மட்டுமில்லை உள்நாட்டிலும் டிரம்பிற்கு ஆதரவு இல்லை. இதற்கு முன்பு போரை ஆரம்பித்த அமெரிக்க அதிபர்களைப் போல இல்லாமல்.. அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எந்த ஆதரவையும் திரட்டாமல், தெளிவான போர் நோக்கங்களை வகுக்காமல் போருக்குச் சென்றார். தனது கூட்டணி நாடுகள் அல்லது அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட கலந்தாலோசிக்க வேண்டிய அவசியத்தை அவர் உணரவில்லை. இதுவே அவருக்கு இப்போது சிக்கலாக மாறியுள்ளது.

1991இல் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் (சீனியர் புஷ்) குவைத்தை ஈராக் சர்வாதிகாரி சதாம் ஹுசைனிடம் இருந்து விடுவிக்க 'ஆபரேஷன் டெசர்ட் ஷீல்ட்' நடவடிக்கையைத் தொடங்கியபோது, 40க்கும் மேற்பட்ட நாடுகள் அடங்கிய ஒரு கூட்டணியை உருவாக்கினார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகன் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ.புஷ், ஈராக்கிற்கு எதிராக ஒரு போரைத் தொடங்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் ஒப்புதலைப் பெற்றார். அப்போது ஐரோப்பிய நாடும் உதவியது.

டிரம்ப் செய்த காரியம்

ஆனால், இப்போது டிரம்பிற்கு யாரும் உதவவில்லை. ஏனென்றால் முந்தைய அதிபர்கள் ஆதரவைத் திரட்டிவிட்டே போரை ஆரம்பித்தனர். ஆனால், டிரம்ப் தனது நேட்டோ கூட்டாளிகளிடம் உதவி கோரியபோது, போர் ஏற்கனவே மூன்றாவது வாரத்தில் நுழைந்திருந்தது. அமெரிக்காவால் தனியாகக் கையாள முடியாத அளவுக்கு அது கடுமையானதாக இருந்தது. இதன் காரணமாகவே டிரம்ப் உதவி கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உலகின் முக்கிய கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. அதைத் திறக்க டிரம்ப் உதவி கோருகிறார். அத்தோடு நிறுத்தினால் பரவாயில்லை. முழு போரிலும் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்கிறார். சொல்லாமல் கொள்ளாமல் போரை ஆரம்பித்துவிட்டு, அமெரிக்காவின் நட்பு நாடுகள் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும் என்கிறார். இப்படி டிரம்ப் இஷ்டத்திற்குப் பேசுவது உலக தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

பிரச்சினை

அதேநேரம் ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்குத் தனது படைகளை அனுப்பினால் வேறு இடங்களுக்குத் தனது பாதுகாப்பை வாபஸ் பெற வேண்டும். இது ஒரு ஆபத்தான நடவடிக்கை. ஐரோப்பாவைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மத்திய கிழக்கு முன்னுரிமை இல்லை. ரஷ்யாவில் இருந்து வரும் அச்சுறுத்தலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அவர்களின் முன்னுரிமை. டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா நம்பகத்தன்மை அற்றதாக மாறி வருவதால், அவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்புத் திறன்களை உருவாக்கி வருகின்றனர்.

உக்ரைனில் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா மற்றொரு ஐரோப்பிய நாட்டை ஆக்கிரமிக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இதன் காரணமாகவே ஈரானுடனான போரில் தேவையில்லாமல் நுழைந்து, தங்கள் ராணுவ வளங்களை வீணடிக்க வேண்டாம் என அவர்கள் கருதுகிறார்கள்.

ஐரோப்பிய நாடுகள்

அதேபோல ஈரான் போரில் தங்கள் நாடுகள் நுழையக் கூடாது என்றே அன்ன நாடுகளின் மக்கள் கருதுகின்றனர். இது பெரும்பாலும் இஸ்ரேலின் போராகவே பார்க்கப்படுவதால் தங்கள் வளம் வீணடிக்கப்படக்கூடாது என ஐரோப்பிய மக்கள் கருதுகிறார்கள். ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்களைப் பாதுகாக்க அமெரிக்காவே தயங்கும் நிலையில், ஐரோப்பியர்கள் ஏன் தங்கள் கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவை எல்லாம் சேர்ந்தே ஐரோப்பிய நாடுகளை இந்த போரில் இருந்து விலக்கி வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+