பதவி விலகுவதாக அறிவித்த 'கிவி' பிரதமர்..இவரை போன்றவர் தான் இந்தியா-க்கு தேவை.. காங்கிரஸ் ட்விட்!
வாஷிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக கூறுகையில், "இவரைப் போன்றவர்கள் தான் இந்திய அரசியலில் அதிகம் தேவை" என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமராக கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி முதல் பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டர்ன்.
37 வயதில் ஜெசிந்தா, அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றபோது, உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.

ஜெசிந்தா ஆர்டன்
இதற்கு அடுத்த ஆண்டில் அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, பதவிக்காலத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட இரண்டாவது உலகத்தலைவர் என்ற சிறப்பும் இவருக்கு கிடைத்தது. கொரோனா பெருந்தொற்று, கிறைஸ்ட் சர்ச் நகரத்தில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூடு போன்ற நெருக்கடியான காலங்களில் நாட்டை வழிநடத்திய ஜெசிந்தா ஆர்டன் தற்போது திடீரென ராஜினாமா முடிவை அறிவித்தார். நாட்டில் அவரது செல்வாக்கு சரிவே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

புதிய பிரதமர் யார்?
செய்தியாளர்கள் சந்திப்பில் பதவி விலகலை அறிவித்த ஜெசிந்தா ஆர்டர்ன், நான் தொழிலாளர் கட்சித்தலைவர் பதவியில் இருந்து பிப்ரவரி 7-ந் தேதி விலகுகிறேன். நியூசிலாந்தில் அக்டோபர் 14-ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும். பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெறாது என்பதற்காக நான் பதவி விலகவில்லை. வெற்றி பெறும் என்றே நம்புகிறேன்"என்றார். ஜெசிந்தா பதவி விலகலைத் தொடர்ந்து அங்கு புதிய பிரதமராக பதவி ஏற்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் வரவேற்பு
நியூசிலாந்து பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் கூறியதாவது: புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் விஜய் மெர்சன் தனது கேரியர் உச்சத்தில் இருந்த போது ஓய்வு அறிவித்தார்.இது பற்றி அவர் கூறும் போது, நீங்கள் ஏன் இன்னும் போகவில்லை என்று மக்கள் கேட்காமல் இப்போதே ஏன் செல்கிறார் என்று கேட்கும் நிலை இருக்கும் போதே ஓய்வை அறிவித்து விடுங்கள்" என்றார். இந்த வார்த்தையை பின்பற்றும் வகையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தார் ஆர்டன் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். இவரைப் போன்றவர்கள் தான் இந்திய அரசியலில் அதிகம் தேவை"எனப்பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜெசிந்தா நியூசிலாந்து பலருக்கு உத்வேகமாகவும், எனக்கு சிறந்த தோழியராகவும் இருந்து வருகிறார் என தனது ட்விட் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார். 41 வயதே ஆன ஜெசிந்தா ஆர்டர்னின் ராஜினாமா அறிவிப்பு சர்வதேச அரசியலிலும் கவனம் பெற்றுள்ளது.
-
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள்











Click it and Unblock the Notifications