கடும் பஞ்சத்தால் தவிக்கும் மக்கள்.. ஆனாலும் மகளுக்காக கிம் ஜாங் உன் என்ன செய்திருக்கார் பாருங்க!
வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவுவதாகவும் இதனால் மக்கள் தவித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், கிம் ஜாங் உன்னின் செல்ல மகளான ஜூ ஏ மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறாராம்.
வாஷிங்டன்: வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவுகிறது. இதனால் மக்கள் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், கிம் ஜாங் உன்னின் செல்ல மகளான ஜூ ஏ மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறாராம். இது தொடர்பான தகவலை தென்கொரிய உளவு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியா.. .அந்த நாட்டில் என்ன நடக்கிறது என வெளி உலகத்திற்கு அவ்வளவு எளிதில் தெரியாது.
கடுமையான கட்டுப்பாடுகளும் விதித்து சர்வாதிகார ஆட்சியை கிம் ஜாங் உன் அங்கு நடத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனைகளை நடத்தி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை கிம் ஜாங் உன் அச்சுறுத்தி வருகிறார்.

சிகை அலங்காரத்துக்கும் கட்டுப்பாடு
வெளி உலகத் தொடர்பு எதுவும் இன்றி அந்த நாட்டில் மக்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களுக்கு தடை, மேற்கத்திய நாடுகளின் சினிமாக்கள் பார்ப்பதற்கு தடை அங்கு விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் சொல்லப்போனால் பல வினோதமான கட்டுப்பாடுகளும் கூட அங்கு அமலில் இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட வடிவத்தில் தான் சிகை அலங்காரம் இருக்க வேண்டும் என்பது உள்பட பல விசித்திரமான கட்டுப்பாடுகளும் உள்ளன.

கடுமையான பொருளாதார தடை
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவரது தந்தை மரணத்திற்கு துக்கம் அனுசரிப்பதற்காக அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்தும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உத்தரவிட்டு இருந்தார். இப்படி தனது அதிரடி நடவடிக்கைகள் மட்டும் இன்றி வினோதமான உத்தரவுகளுக்கும் உலக அளவில் கிம் ஜாங் உன் பெயர் போனவர். வடகொரியாவின் அடாவடி செயலுக்கு பதிலடியாக அமெரிக்கா அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

கடும் உணவு பஞ்சம்
சீனாவிடம் மட்டுமே நட்பு பாராட்டும் வடகொரியா பொருளாதார தடைகளால் தத்தளித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கூட விண்ணை முட்டும் அளவிற்கு இருப்பதாக தென்கொரிய செய்தி நிறுவனங்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றன. இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வறட்சி உள்ளிட்டவற்றால் அந்த நாட்டில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடும் உணவு தட்டுப்பாடு காரணமாக வடகொரிய மக்கள் மக்காச்சோளத்தை வாங்கி உண்ண தொடங்கினர். ஆனால் தற்போது மக்காச்சோளத்தின் விலையும் 20% அதிகரித்துவிட்டது.

செல்ல மகளுக்கு ஆடம்பர லைப்
மக்கள் படும் துயரங்களை எல்லாம் கண்டு கொள்ளாத அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதச் சோதனைகளை இடைவிடாமல் நடத்திவருகிறார். ஒருபக்கம் கடுமையான பஞ்சத்தால் வடகொரிய மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிபர் கிம் ஜாங் உன்னின் செல்ல மகளான ஜூ ஏ ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தென்கொரிய உளவு அமைப்புகள் கூறுகின்றன. தனியாக கல்வி நிறுவனங்களுக்கு எதுவும் கிம் ஜாங் உன் மகள் ஜூ ஏ செல்வது இல்லையாம்.

வடகொரியாவில் தனது அரசியல் வாரிசாக
ஆசிரியர்கள் வீட்டிற்கே வந்து பாடம் எடுத்து வருகிறார்களாம். அது போக ஸ்விம்மிங், ஹார்ஸ் ரைடிங் என மிகவும் ஆடம்பரான லைப் ஸ்டலை ஜூ ஏ பின்பற்றி வருகிறாராம். சமீப காலமாக தனது மகளை பொது நிகழ்சிகளுக்கு கிம் ஜாங் உன் அழைத்து வருகிறார். இதனால், வடகொரியாவில் தனது அரசியல் வாரிசாக மகளை முன்னிறுத்தும் முயற்சியாக கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வரலாம் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

மகள் பெயரை வைக்கக்கூடாது என..
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கிம் ஜாங் உன்னிற்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். தனது நாட்டைப் போலவே குடும்பம் பற்றியும் ரகசியம் காத்து வந்த கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தான் பொதுவெளியில் தனது மகளை அழைத்து வருகிறார். தனது மகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜூ ஏ என்ற பெயரை நாட்டில் வேறு வைத்திருக்கக் கூடாது என்ற உத்தரவை வேறு கிம் ஜாங் உன் போட்டு வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications