சிங்கிள் லாட்டரியில் கோடீஸ்வரர் ஆன பல ஆயிரம் பேர்.. அடுத்து நடந்ததுதான் பெரிய ட்விஸ்ட்!
வாஷிங்டன்: நார்வே நாட்டில் லாட்டரி வாங்கிய பல ஆயிரக்கணக்கானோருக்கு கோடிகளில் பரிசு விழுந்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதனைப்பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த அவர்களுக்கு சில நிமிடங்களில் பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அப்படி என்னதான் நடந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது. லாட்டரி என்பது ஒரு சூதாட்டம்.. பல லட்சம் டிக்கெட்டுகளில் ஒருவருக்கு மட்டுமே பரிசு அடிக்கும் என்று தெரிந்தும் பலரும் லாட்டரி விளையாடுவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் கூட கேரளா, நாகலாந்து, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரிக்கு அனுமதி இருக்கிறது.

கடைசி நேரத்தில் ட்விஸ்ட்
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, பூடான் ஆகியவற்றிலும் லாட்டரிகள் மிகப் பிரபலம். சமீபத்தில் கூட இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகெப்பெரிய தொகையாக இலங்கை மதிப்பில் 47 கோடி ஒருவருக்கு லாட்டரியில் பரிசு அடித்து இருந்தது. லாட்டரிகளை பொறுத்தவரை ஒருநாளாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா நாமும் கோடீஸ்வர் ஆகிவிட மாட்டோமா என நினைத்துக்கொண்டு லாட்டரி பலரும் விளையாடுகிறார்கள்.. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.
நடப்பது கனவா? நிஜமா?
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் லாட்டரி நிறுவனம் ஒன்று லாட்டரி டிக்கெட் வாங்கியவர்களில் 47 ஆயிரம் பேருக்கு பல கோடிகளை வென்றதாக பரிசு அடித்துள்ளது. யூரோ ஜாக்பாட் லாட்டரி டிக்கெட் வாங்கியவர்களுக்குதான் இப்படி இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இதனால், டிக்கெட் வாங்கிய பல ஆயிரம் பேர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். நடப்பது கனவா? நிஜமா என புரியாத அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்து கொண்டு இருந்தவர்களுக்கு சில நிமிடங்களில் பெரிய ட்விஸ்ட் ஒன்று காத்திருந்துள்ளது.
அதாவது, பரிசுத்தொகையை உள்ளூர் பண மதிப்புக்கு கணக்கிடும் போது 100 ஆல் வகுப்பதற்கு பதிலாக 100 ஆல் பெருக்கிவிட்டார்களாம், லாட்டரி நிறுவன ஊழியர்கள். இதனால், பல ஆயிரம் பேருக்கும் கோடிகளில் பரிசு விழுந்ததாக மெசேஜ் போயிருக்கிறது. சிறிது நேரத்தில் தவறை கண்டறிந்த லாட்டரி நிறுவனம், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளது. இதனால், சில நிமிடங்கள் சந்தோஷமாக இருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நல்ல நேரம் வந்ததாக நினைத்தேன்
இப்படி ஏமாற்றம் அடைந்தவர்களில் ஒருவரான ஒலே பிரேட்ரிக் ஸ்வீன் என்பவர் இது பற்றி கூறுகையில், நான் கீரிஸ் நாட்டில் விடுமுறை நாளை கழிக்க போயிருந்தேன். அப்போது 1.2 மில்லியன் க்ரோனர் (1,19,000 டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி) பரிசு அடித்துள்ளதாக மெசேஜ் வந்தது. அப்பாடா.. ஒரு வழியாக நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது.
இது உண்மைதானா என்று லாட்டரி நிறுவனத்தின் வெப்சைட்டில் போய் பார்த்தேன். அதிலும் வாழ்த்துக்கள் என்று வந்தது. ஆனால் உண்மையில் எனக்கு சுமார் ஆயிரம் ரூபாய்தான் பரிசாக அடித்து இருந்துள்ளது. அடுத்த சில நாட்களில் என்னை போன்று 47 ஆயிரம் பேருக்கு லாட்டரி நிறுவனத்திடம் இருந்து மெசேஜ் வந்தது. அதில், தவறுக்கு வருந்துவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது" என்றார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications