நூற்றாண்டுகளில் இல்லை..'சில மணி நேரங்களில் சந்திரன் உருவாகியுள்ளது'.. ஆராய்ச்சியாளர்களின் புது தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பூமியின் துணைக்கோளான நிலா உருவாவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில் நிலா உருவாகியிருக்கும் என்பதை தரவுகள் காட்டியதாக ஆய்வாளர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

பூமியின் துணைக்கோள் நிலா என்பது நாம் அனைவருக்கும் தெரியும். பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலா பள்ளங்களும் மேடுகளும் நிறைந்த ஒரு துணைக்கோளாகும்.

இருள் நிறைந்த வானத்தில் பிரகாசமாக பளிச்சிடும் நிலவை கண்டு ரசிக்காதவரே இல்லை. பூமி எப்படி உருவானது என்பதை ஆய்வு செய்வதை போல நிலவின் தோற்றத்தை கண்டறியும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

நிலவு எப்படி உருவானது

நிலவு எப்படி உருவானது

பூமியில் வாழும் மனிதன் முதன் முதலாக கால் பதித்த ஒரே ஒரு துணைக்கோள் நிலவு மட்டுமே ஆகும். நிலவில் இருந்து பாறைகள் போன்ற மாதிரிகள் கொண்டு வரப்பட்டு நிலவின் தோற்றம், உள்கட்டமைப்பு போன்றவைகளை விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கிறது. பூமியின் இயற்கையான துணைக்கோளாக இருக்கும் நிலவு பல நூற்றாண்டுகளாக உருவாகியிருக்கும் என்றே இதுவரை சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இதன் தோற்றம் குறித்த மர்மம் இதுவரை இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை.

ஆராய்ச்சியாளர்கள் புது தகவல்

ஆராய்ச்சியாளர்கள் புது தகவல்

சூரிய குடும்பத்தில் இருந்ததாக கருதப்படும் தேயியா(theia) என்ற கோள் புவியுடன் மோதியதில் ஏற்பட்ட சிதைந்த பொருள்கள் மூலமே நிலா உருவானதாக கூறப்படுகிறது. முதலில் இரண்டு நிலா உருவாகி பிறகு இரண்டும் இணைந்து தற்போது நமது கண்னில் தென்படும் நிலாவாக உருவானதாக விஞ்ஞான முடிவுகளின் படி கூறப்படுகிறது. இந்த நிலவு உருவாக பல நூற்றாண்டுகள் ஆகியிருக்க கூடும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது சில மணி நேரங்களில் நிலவு உருவாகியிருக்கும் என்ற புது தகவலை ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில மணி நேரங்களில் நிலவு உருவானது

சில மணி நேரங்களில் நிலவு உருவானது

டர்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தான் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். சூப்பர் கணிணினியை பயன்படுத்தி புவி மீது தேயியோ கோள் மோதியதை உருவகப்படுத்தி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ததாகவும் அதில், இந்த மோதலுக்குப் பிறகு உடனடியாக சில மணி நேரங்களில் நிலா உருவாகியிருக்கலாம் என்பதை தரவுகள் காட்டியதாக ஆய்வாளர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களில் நிலவு உருவானது

சில மணி நேரங்களில் நிலவு உருவானது

டர்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தான் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். சூப்பர் கணிணினியை பயன்படுத்தி புவி மீது தேயியோ கோள் மோதியதை உருவகப்படுத்தி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ததாகவும் அதில், இந்த மோதலுக்குப் பிறகு உடனடியாக சில மணி நேரங்களில் நிலா உருவாகியிருக்கலாம் என்பதை தரவுகள் காட்டியதாக ஆய்வாளர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆய்வை அடுத்த கட்த்திற்கு எடுத்துச்செல்ல..

ஆய்வை அடுத்த கட்த்திற்கு எடுத்துச்செல்ல..

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக நம்பப்படும் இந்த நிலாவின் தோற்றம் குறித்து வெளியாகி இருக்கும் புதிய தகவல் நிலவை பற்றிய ஆய்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஞ்ஞானிகள் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆய்வாளர்களின் இந்த புதிய கண்டுப்பிடிப்புகள் The Astrophysical Journal Letters- என்ற இதழில் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+